வெலிமடையில் பஸ் – முச்சக்கரவண்டி விபத்து

வெலிமடை பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான ‘கெப்பெடிபொல’ டிபோவின் கட்டுப்பாட்டிலுள்ள பேரூந்து ஒன்றினை இயக்கிய பஸ் நடத்துனர் வாகன கட்டுப்பாடின்மையால் நகரத்தில் நிறுத்தி வைத்திருந்த முச்சக்கரவண்டியொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பஸ் மேலும் இரு வியாபார நிலையங்களிலும் மோதியதில் அவ் வியாபார நிலையங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டி ஓட்டுனர் வெலிமடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த விபத்து 09.08.2016 அன்று காலை இடம்பெற்றுள்ளதுடன் விபத்தினை ஏற்படுத்திய பஸ் நடத்துனரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ் விபத்து தொடர்பில் வெலிமடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொன்டு வருகின்றனர்.S2650002 S2650003 S2650010

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds