வெலிக்­க­டைச் சிறை படுகொலை விசாரணை டிசெம்­பர் 6!

2012ஆம் ஆண்டு வெலிக்­க­டைச் சிறை­யில் வைத்து, கைதி­கள் 27 பேர் படு­கொலை செய்­யப்­பட்­டமை தொடர்­பில் தாக்­கல் செய்­யப்­பட்ட  மனுவை எதிர்­வ­ரும் டிசெம்­பர் 6ஆம் திகதி விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்ள மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றம் தீர்­மா­னித்­துள்­ளது.

மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத் தலை­வர் நீதி­ய­ர­சர் எல்.ரி.பி.தெஹி­தெ­னிய மற்­றும் நீதி­ய­ர­சர் கே.கே.விக்­கி­ர­ம­சிங்க ஆகி­யோ­ர­டங்­கிய நீதி­ய­ர­சர்­கள் குழாம் முன்­னிலை­ யில் மனு நேற்று எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது.

விசா­ரணை வெளிப்­ப­டை­யாக இருக்­க­வேண்­டும். இது தொடர்­பான அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட வேண்­டும் என்­றும் மனு­தா­ரர் சார்­பில் முன்­னி­லை­யான சட்­டத்­த­ரணி ரத்­ன­வேல் மன்­றில் கோரி­னார்.

இரா­ணு­வத்­தி­னர், சிறைச்­சாலை அதி­கா­ரி­கள், பொலி­ஸார் ஆகி­யோ­ரி­டம் புதி­தாக விசா­ர­ணை­கள் இடம்­பெற்­று­வ­ரு­கின்­றன என்று, சட்­டமா அதி­பர் திணைக்­க­ளத்­தின் சார்­பில் முன்­னி­லை­யான மூத்த அரச சட்­டத்­த­ரணி மாதவ தென்­ன­கோன், மன்­றில் அறி­வித்­தார்.

75 சத­வீ­த­மான விசா­ர­ணை­கள் முடி­டைந் துள்­ளன. மேல­திக விசா­ரணை­ களுக்கு 4 தொடக்­கம் 6 வாரங்­கள் தேவை. முன்­னேற்ற அறிக்கை தாக்­கல் செய்­யப்­ப­டும் என்று அவர் குறிப்­பிட்­டார்.

மனு டிசெம்­பர் 6ஆம் திகதி எடுத்­துக்­கொள்­ளப்­ப­டும் என்று நீதி­ய­ர­சர்­கள் குழாம் அறி­வித்­தது.

பயங்­க­ர­வா­தத் தடைச்­சட்­டத்­தின் கீழ் 2007ஆம் ஆண்டு கைது செய்­யப்­பட்டு, 2009ஆம் ஆண்டு வெலிக்­கடை சிறைச்­சா­லை­யில் தடுத்து வைக்­கப்­பட்டு, 2013ஆம் ஆண்டு சட்­டமா அதி­ப­ரால் விடு­விக்­கப்­பட்ட, டபிள்யூ.எஸ்.நந்­தி­மால் சில்வா என்­ப­வ­ரா­லேயே இந்த ரிட் மனு தாக்­கல் செய்­யப்­பட்டது.

சிறைச்­சா­லை­கள் திணைக்­க­ளத் தின் பணிப்­பா­ளர் நாய­கம், குற்­றப் புல­னாய்­வுத் திணைக்­க­ளத்­தின் பணிப்­பா­ளர், பொலிஸ்மா அதி­பர், சிறைச்­சா­லை­கள் மற்­றும் மறு­வாழ்வு அமைச்­சர், சட்­டமா அதி­பர் ஆகி­யோர் பிர­தி­வா­தி­க­ளா­கக் குறிப்­பி­டப்
பட்­டுள்­ள­னர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com