சற்று முன்
Home / செய்திகள் / வெறுமனே சமூக வலைத்தள போராளிகளாக இருக்கப் போகிறோமா?.- பபில்ராஐ

வெறுமனே சமூக வலைத்தள போராளிகளாக இருக்கப் போகிறோமா?.- பபில்ராஐ

தமிழினம் விழித்துக் கொண்டு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டிய கால கட்டத்தில் இருப்பதாக குறிப்பிட்டிருக்கும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் எஸ்.பபில்ராஐ; வெறுமனே சமூக வலைத்தள போராளிகளாகத் தான் இருக்கப் போகிறோமா என்பதை சிந்திக்க வேண்டுமென்றும் கோரியுள்ளார்.

அன்பையும் சமாதானத்தையும் போதிக்க வேண்டிய மதத் தலைவர்கள் (பௌத்த துறவிகளில் சிலர்) காட்டுமிராண்டித்தனமான முறையில் பிற மதஸ்தலங்களை அவமதிக்கும் நிலையின் உச்சமே செம்மலை விவகாரம்.

நீதிமன்றத் தீர்ப்புகளை மதிக்காமல் அதற்கு முரணாக பௌத்த துறவிகள் செயற்பட முடியுமானல் சட்டங்கள் எல்லாம் சிறுபான்மை மக்களினை அடக்குவதற்குதான் என்பதை மீண்டும் ஒரு தடவை நிரூபித்துள்ளார்கள்.

சட்டத்தையும் நீதிமன்றத் தீர்ப்புக்களையும் நடைமுறைப்படுத்த வேண்டிய பொலீஸ்காரர் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதுடன் சட்டத்தை மீறிச் செயற்படுகிறவர்களிற்கு பாதுகாப்பும் வழங்குகிறார்கள்.

ஆகவே ஈழத் தமிழர்களாகிய நாம் இப்போதாவது விழித்துக்கொள்ள வேண்டும் இலங்கைத் தீவில் எமக்கான அங்கீகாரம் எதுவுமே இல்லாத நிலையில் நாம் இப்போது ஓர் தீர்க்கமான முடிவினை எடுக்க வேண்டும். எமக்கான அங்கீகாரம் இல்லாத ஓர் நாட்டின் ஜனாதிபதியினைத் தேர்ந்தெடுக்க நாம் ஏன் வாக்களிக்க வேண்டும்.

எனவே ஜனாதிபதித் தேர்தலினை தமிழ் மக்களாகிய நாம் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கும் ஓர் முடிவினை எடுக்க வேண்டும். (ளுடுகுPஇ ருNPஇ பெரமுன என எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் எமக்கு இதுதான் நிலை)

அவ்வாறு இல்லையென்றால் குறைந்தபட்சம் தமிழ் மக்கள் சார்பில் ஒரு பொது வேட்பாளரையேனும் களமிறக்க வேண்டும். (வெற்றி பெற முடியாது என்றாலும் நாம் எமது தனித்துவத்தை வெளிப்படுத்த முடிவதோடு எமது பேரம்பேசலிற்கான பலத்தையும் அதிகரிக்க முடியும்.)

இல்லையென்றால் இன்னும் ஒரு தசாப்தத்தில் நாம் எமது பூர்வீக தாயகத்தையும் எமது அடையாளங்களையும் இழந்து விடுவோம் என்பது திண்ணம்.

உரிமைகளை இழந்தோம். உடமைகளை இழந்தோம். ஆனாலும் உணர்வுகளை எம்மினம் இழக்கவில்லை என்றே இதுவரையில் நினைத்திருந்தோம். மாறாக உணர்வுகளையும் இழந்துவிட்டது என்பதைத்தான் இன்றைய போராட்டங்கள் உணர்த்துகின்றன.

வெறுமனே சமூக வலைதளப் போராளிகளாக தான் இருக்கப் போகிறோமா என்பதை இளந் தலைமுறையினர் சிந்திக்க வேண்டும்.

ஆயுதங்களால் சாதிக்க முடியாததை ராஜதந்திர நகர்வுகளிற்கூடாக சாதிக்க முடியும். அதுவும் நாம் விழிப்படைந்தால் மட்டுமே.

நாளைய தலைமுறை அடக்குமுறைகள் ஏதுமின்றி சுதந்திரமாக இம் மண்ணில் வாழ ஒருமித்த குரலாய் ஓர் முடிவினை எடுக்க வேண்டும்

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com