#வெடி #விபத்தில் #ஒருவர் #படுகாயம் பளையில் இன்றிரவு சம்பவம்

மிதிவெடி அகற்றல் பிரிவில் பணியாற்றும் குடும்பத்தலைவர் ஒருவர், வெடிபொருள் ஒன்றிலிருந்து வெடிமருந்தை அகற்ற முற்பட்ட போது அது வெடித்ததில் படுகாயமடைந்தார். அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுளார் என்று கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் பளை நகரப் பகுதிக்கு அண்மையாக இன்றிரவு 7 மணியளவில் இடம்பெற்றது.
பளை நகரைச் சேரந்த சிவமூர்த்தி சுரேந்திரன் ( வயது – 38 ) என்ற குடும்பத்தலைவரே படுகாயமடைந்தார்.

“வெடி விபத்தில் படுகாயமடைந்தவர் தனக்கு வேறொருவர் வெடிவைத்ததாகவே தெரிவிக்கின்றார். வெடிவிபத்தில் படுகாயமடைந்தவருடன் வேறொருவரும் நின்றுள்ளார் அவரிடம் விசாரணைகள் இடம்பெறுகின்றன” என்றும் கிளிநொச்சிப் பொலிஸார் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com