வெசாக்கை முன்னிட்டு 597 கைதிகள் விடுதலை – தமிழ் அரசியல் கைதிகள் எவருமில்லை !

ஜநாவின் சர்வதேச வெசாக் தினத்தை முன்னிட்டு இலங்கை ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ், இலங்கை முழுவதுமாக சிறைச்சாலைகளில் இருந்த 597 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனரென, அறிவிக்கப்பட்டுள்ள போதும் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்களுள் அரசியல் கைதிகள் எவருமில்லையென கூறப்படுகின்றது.
விடுவிக்கப்பட்ட கைதிகளில், பெண்கள் ஐவரும் உள்ளடங்குவதாகவும் தெரியவருகின்றது. சிறு குற்றங்கள் புரிந்த மற்றும் அபராதத் தொகைத் தொகையைச் செலுத்த முடியாதமையின் காரணமாக சிறையில் இருந்த கைதிகளே, இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக ஜநாவின் சர்வதேச வெசாக் தினத்தை முன்னிட்டு இலங்கை ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டுமென அரசியல் கைதிகளது விடுதலைக்கான அமைப்பு கோரியிருந்தது.
இதனிடையே சிறைகளில் இருந்த 213 அரசியல் கைதிகளில் தற்போது 98 பேர் மட்டுமே இன்னமும் சிறைகளில் உள்ளதாக பிரதமரால் தெரிவிக்கப்பட்டதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இவ்வருடம் ஆரம்பிக்கும்போது 213 கைதிகள் தடுப்பில் இருந்தனர். அவர்களில் 49 பேர் தண்டனை தீர்க்கப்பட்டவர்கள் ஏனைய 164 பேர் வழக்கு விசாரணை இடம்பெற்றுக் கொண்டிருந்தவர்கள் . ஆனால் தற்போது தண்டனை விதிக்கப்பட்டவர்களில் 47 பேரும் வழக்கு விசாரணைகள் இடம்பெறுபவர்களில் 51 பேரும் சிறையிலுள்ளாக இலங்கைப்பிரதமரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com