சற்று முன்
Home / செய்திகள் / வீட்டுத்திட்டத்தில் அரசியல் சிபார்சிற்கு இடமில்லை – யாழ் அரச அதிபர்

வீட்டுத்திட்டத்தில் அரசியல் சிபார்சிற்கு இடமில்லை – யாழ் அரச அதிபர்

யாழ்ப்பாணக் குடாநாட்டில் வீட்டுத் திட்டத்தில் எந்த அரசியல் வாதிகளின் சிபார்சிற்கும் முன்னுரிமை அளிக்கப்படமாட்டாது. அதேநேரம் தகுதியான , பாதிப்புற்ற குடும்பங்கள் என உறுதி செய்யப்பட்டு இனங்கானப்படுபவர்களிற்கு மட்டுமே வீட்டித் திட்டம் வழங்கப்படும் . என யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் சில அரசியல் கட்சி அலுவலகங்களில் வீட்டுத் திட்டம் தொடர்பில் பதிவு செய்வதோடு பிரதேச செயலகத்தில் மேற்கொண்ட பதிவுகளை கேட்பதாகவும் வேறு சில இடத்தில் மக்களை அழைத்து விபரம் சேகரிக்கப்பட்டு அதனை சிபார்சு செய்யப்படுகின்றது. இவ்வாறு வழங்கப்படும் பட்டியலின் பிரகாரமே எதிர்காலத்தில் வீட்டுத் திட்டம் சிபார்சு செய்யப்படும் என கூறப்படுகின்றமை தொடர்பில் மாவட்டச் செயலாளரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மாவட்டச் செயலாளர் மேலும் விபரம் தெரிவிக்கையில் ,

யாழ்ப்பாணக் குடாநாட்டில் வீட்டு வசதிகள் அற்றவர்கள் வீட்டுத் திட்டம்கோரி பிரதேச செயலகங்களில் பதிவு செய்கின்றனர். அவ்வாறு பதிவு செய்தவர்களின் விபரம் மாவட்டச் செயலகங்களிற்கு அனுப்பி வைக்கப்படும் அதற்கு அடிப்படையில் மாவட்டத்திற்கு கிடைக்கும் வீடுகளில் இருந்து தகமையின் அடிப்படையில் நியாயபூரவமான காரணங்களிற்கு தகமையின் அடிப்படையில் மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும் . அதனை விட எந்தக் கட்சியானாலும் அல்லது எந்த அரசியல்வாதிகளிடம் சென்று பதிந்தாலும் அதனை நாம் கணக்கெடுப்பது கிடையாது.

அவ்வாறு இடம்பெறுவது அவர்களின் அரசியல் செயல்பாடு என்பதனால் நாம் தலையிடுவது கிடையாது. ஆனால் எந்த அரசியல் வாதிகளின் சிபார்சிற்கும் முன்னுரிமை அளிக்கப்படமாட்டாது. என்பதனை மட்டும் என்னால் உறுதியாக கூறமுடியும்.

இதேநேரம் தற்போது 2018ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அனுமதிக்கப்பட்டு தாமதித்த வீடுகள் கிடைத்துள்ளன.அவை நாடாளுமன்ற உறுப்பினர் , அமைச்சர்கள் என எவரின் சிபார்சுகள் அன்றி தேவையை நாம் இனம்கானப்பட்ட பட்டியலிற்கே வழங்கப்படுகின்றன. என்றார்

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஆரியகுளத்தில் மத அடையாளங்களுக்கு இடமில்லை !

யாழ் மாநகர சபைக்கு சொந்தமான ஆரியகுளத்தில் எந்த விதமான மத அடையாளங்களையும் அமைக்க அனுமதிக்க முடியாது ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com