வீட்டுக்கு ஒரு பிள்ளை தோட்டத்தில் படித்தால் நாளை அரச திணைக்களங்கள் தோட்டத்திற்கு வந்து வீடும் – அட்டன் வலயக் கல்விப்பணிப்பாளர் பி.ஸ்ரீதரன்

வெளிஓயா தோட்டத்தில் இன்று அதிகமான சிறுவர்கள் இருக்கிறார்கள் எமது எதிர்காலம் கல்வியில் தான் தங்கியிருக்கிறது. அதற்கு நான் அனைவரும் இணைந்து உழைக்க வேண்டும் இன்று இருக்கின்ற சிறுவர்களில் வீட்டுக்கு ஒரு பிள்ளை தோட்டத்தில் படித்தாலே போதும் நாளை அரச திணைக்களங்கள் தோட்டத்திற்கு வந்து விடும் ஏனென்றால் இருக்கின்ற 248 அரச திணைக்களங்களில் எமது தோட்டத்தில் உள்ள யாராவது ஒருவர் வேலை செய்வார்கள் அப்போது நிச்சயம் அவர்களை தேடி தோட்டத்திற்கு வர வேண்டிய சூழ்நிலை ஏற்படும் நானும் தோட்டத்தில் பிறந்தவன் என்பதால் எனது காலப்பகுதியில் என்னால் முடிந்தளவு கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து செயப்படுவேன் என அட்டன் வலயகக்கல்விப்பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

சிந்தனை சிற்பிகள் என்ற இளைஞர் அமைப்பு ஒழுங்கு செய்திருந்த புத்தாண்டு விழாவும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் 01.01.2017 அன்று வெலிஓயா கிறீன்லேன்ட் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் புத்தாண்டினை முன்னிட்டு இளைஞர்களுக்கிடையில் கிரிகட் சுற்றுப் போட்டி ஒன்று நடைபெற்றதுடன் சுமார் தோட்டத்தொழிலாளர்கள் மற்றும் ஏனையவர்களின் சிறுவர்களுக்கு தரம் முதல் தரம் 13 வரை கல்வி கல்வி பயிலும் சுமார் 95 மாணவர்களுக்கு இதன் போது கற்றல் உப கரணங்கள் வழங்கப்பட்டன. அத்துடன் விளையாட்டுக்கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களும் இதன் போது வழங்கப்பட்டன.

அவர் அங்கு தொடந்து கருத்து தெரிவிக்கையில், இன்று வீடுகளில் பெரும் பாலான பெரியவர்கள் கைவிடப்படுகிறார்கள் அதற்கு காரணத்தினை தேடிப்பாரத்தால் அந்த வீட்டில் கல்வி கற்றவர் இருக்க மாட்டார் எனவே தான் அவர்கள் கைவிடப்படுகிறார்கள் உங்களுடைய பிள்ளைகளை நீங்கள் நல்ல முறையில் படிக்க வைத்தால் நீங்கள் இறுதி காலத்தினை நிம்மதியாக கழிக்கலாம் எனவே ஒவ்வொரு பெற்றௌரும் கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டும்; இன்று காபட் வீதி வரலாம் ஹெலிகப்டர்கள் கூட வரலாம். ஆனால் அது அவர்களின் வேலை எமது எமது மாணவர்களுக்கு சிறந்த கல்வியினை பெற்றுக்கொடுத்து நாளை இவர்களுக்கு நல்ல எதிர் காலத்தினை உருவாக்குவதே ஆகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

சிந்தனை சிற்பிகளின் அமைப்பின் தலைவர் ஜெயராஜ் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்புத்தாண்டு நிகழ்வுக்கு சட்டதரணி திருச்செல்வம், கடவல விக்ணேஸ்வர கல்லூரியின் ஆசிரியர் பாக்கியராஜ் அட்டன் ஹைலன்ஸ் கல்லூரியின் ஆசிரியர் ஜஸ்டின், மலைமகள் பாடசாலையின் அதிபர் சிவபிரகாசம் உட்பட சமூக ஆர்வாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com