வீடொன்றின் மீது கைக்குண்டு தாக்குதல்

பதுளை புறநகர்பகுதியிலுள்ள வீடொன்றின் மீது கைக்குண்டு தாக்குதல் சம்பவமொன்று, 06.04.2016 அன்று அதிகாலை  இடம் பெற்றுள்ளது.

பதுளைப் பகுதியின் வெலிக்கேமுள்ள என்ற இடத்தின் 39ஏ என்ற இலக்கத்தையுடைய வீடே, கைக்குண்டு தாக்குதலுக்கிலக்கானதாகும்.
கடந்த பத்து வருடங்களுக்கு முன் இடம்பெற்ற பதுளை எரிபொருள் நிலைய முகாமையாளரின் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்த மூவரில் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதுடன், மற்றைய இருவர் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். அவர்களின் வீட்டிற்கே, மேற்படி கைக்குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

பதுளைப் பொலிஸார், இது தொடர்பான தீவிர புலன் விசாரனைகளில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை சம்பவம் தொர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை.

பதுளை – வெலிக்கமுள்ளையைச் சேர்ந்த ஏ.எம்.பிரேமரட்ண என்பவரின் வீடே தாக்குதலுக்குள்ளானதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com