வீடு புகுந்து பணம் திருட்டு – மடக்கிப் பிடித்த இளைஞன் நையப்புடைப்பு

கோண்டாவில் மேற்குப் பகுதியில் அண்மைக்காலமாக வழிப்பறி மற்றும் களவுகள் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை கோண்டாவில் பகுதியில் உள்ள வைத்தியர் ஒருவரின் வீட்டில் பணம் களவாடப்பட்டுள்ளது. பணத்தினைக் களவாடியதாகக் கூறப்படும் இளைஞன் ஒருவர் தப்பி செல்ல முயன்ற போது இளைஞர்களினால் நந்தாவில் பகுதியில் வைத்து மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞனைக் கட்டிவைத்து நையப்புடைத்த இளைஞர்கள் பின்னர் கோப்பாய் பொலிசாரிடம் கையளித்துள்ளனர்.
இந் நிலையில் மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த இளைஞன் நல்லூர்ப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என பொலிஸ் விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com