வீடு உடைத்து பணம் திருடியவர் கைது


புத்தூர் கலைமதி பகுதியில் வீடு உடைத்து பணம் திருடிய சந்தேக நபரான அதே பகுதியினை சேர்ந்த 19வயதுடைய இளஞனை கைது செய்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். நேற்றையதினம்(09) யாரும் இல்லாத வீடு ஒன்றின் பின்பக்க கதவினை உடைத்து உள்ளே சென்ற திருடன் அங்கிருந்து 1இலட்சத்து 5ஆயிரம் ரூபா பணத்தினை திருடியுள்ளார். இது தொடர்பில் குறித்த திருட்டினை அவதானித்த நபர், வீட்டு உரிமையாளருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து நேற்று(09) பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com