வி.ரி.மகாலிங்கம் ஞாபகார்த்த கிண்ணம் திருநெல்வேலி ரி.சி.சி வசம்

வி.ரி.மகாலிங்கம் ஞாபகார்த்தமாக யாழ். மாவட்ட துடுப்பாட்டச் சங்கம் நடத்தி வந்த இருபது-20 கிரிக்கெட் தொடரின் சம்பியனாக திருநெல்வேலி ரி.சி.சி விளையாட்டுக் கழக அணி தெரிவானது. யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்ற இந்த இறுதியாட்டத்தில், யாழ். பல்கலைக் கழக அணியை எதிர்த்து திருநெல்வேலி ரி.சி.சி விளையாட்டுக் கழக அணி மோதியது. இதில், முதலில் துடுப்பெடுத்தாடிய திருநெல்வேலி ரி.சி.சி விளையாட்டுக் கழக அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 129 ஓட்டங்களைச் சேர்த்தது.
பின்னர் 130 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கு நோக்கிக் களமிறங்கிய பல்கலைக் கழக அணி, 19 ஓவர்களில் 105 ஓட்டங்களை மாத்திரம் சேர்த்த நிலையில், சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதனால்,  திருநெல்வேலி ரி.சி.சி விளையாட்டுக் கழக அணி, 24 ஓட்டங்களால் வெற்றியைத் தனதாக்கிக் கொண்டு சம்பியனாகியது. இதன்மூலம் வி.ரி.மகாலிங்கம் ஞாபகார்த்த 20 க்கு இருபது முதலாவது கிண்ணத்தை தனமாக்கிய பெருமையை   திருநெல்வேலி ரி.சி.சி விளையாட்டுக் கழக அணி பெற்றுக்கொண்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com