வி.ஐ.பி !!!

(19.09.2015) யாழ்ப்பாணம் சிலோன் திரையரங்கில் (கார்கில்ஸ் வளாகம்) நேற்றையதினம் காண்பிக்கப்பட்ட முற்றுப்புள்ளியா திரைப்படம் பார்ப்பதற்காக கூட்டம் அலைமோதியதால் பரந்தன், கிளிநொச்சி போன்ற தூர தேசங்களில் இருந்து வந்திருந்த திரைத்துறை ஆர்வலர்கள் உட்பட பலநூறு மாக்கள் உள்நுளைவு அனுமதி இல்லாமல் திருப்பி அனுப்பப்பட்ட நிலையில். நிலத்தில் குந்தியிருந்தேனும் படம் பார்த்துவிடுகின்றோம் எக் கேட்ட சிலருக்கு அனுமதி வழங்கப்பட்டது. எனினும் திரையரங்கிளுள் வடக்கு முதல்வருக்கு அருகில் இருந்த நான்கு கதிரைகள் திரைப்படம் முடியும்வரை எவரும் உட்கார அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் வெறுமையாகவே காணப்பட்டிருந்ததை அவதானிக்கமுடிந்தது.
இந்தக் கதிரைகள் யாரிற்காக ஒதுக்கப்பட்டிருந்தன?? என்ற கேள்விக்கு ஏற்பாட்டாளர்கள் எவரிடமும் பதில் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds