விவேகானந்தனூர் சதீஸின் நூல் வெளியீடும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டமும்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நேற்றுப் பிற்பகல் யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது. நீண்ட காலமாக மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதியான விவேகானந்தனூர் சதீஸ் எழுதிய “சிறையிலிருந்து சிங்களச் சகோதரனுக்கு” நூல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் யாழ்ப்பாணம் இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி முன்றலில் குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர். இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கொழும்பு, மகசீன் சிறைக்கைதியான நூலாசிரியரின் தாயார், யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூரத்தி, சமூக ஆர்வலர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com