விவசாய தொழில்நுட்ப உபகரணங்கள் மீதான சுங்க வரி நீக்கப்படும்!

விவசாய தொழில்நுட்ப உபகரணங்கள் மீதான சுங்க வரி நீக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

தேசிய உணவு உற்பத்தி புரட்சியை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்காக இந்த வரி நீக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

தேசிய உணவு உற்பத்தி புரட்சி கெக்கிராவ திப்பட்டுவௌ நீர்த்தேக்கத்துக்கு அருகில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் சற்றுமுன்னர் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.  தேசிய உணவு உற்பத்தி செயற்திட்டத்துக்கு புத்துயிரூட்டல் மற்றும் நாட்டில் விவசாய எழுச்சியை ஏற்படுத்தும் நோக்கில் தேசிய உணவு உற்பத்தி புரட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது

அதன்படி முதல் நாளான இன்று (06) விவசாய தினமாக பெயரிடப்பட்டுள்ளதுடன், 07 ஆம் திகதி மாணவர் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

08 ஆம் திகதி கால்நடை வளர்ப்பு தினமாகவும், 09 ஆம் திகதி தொழில்முயற்சியாண்மை தினமாகவும், 10 ஆம் திகதி மீன்பிடி தினமாகவும், 11 ஆம் திகதி அரச ஊழியர்கள் தினமாகவும், 12 ஆம் திகதி நீர் தினமாகவும் பெயரிடப்பட்டு தேசிய உணவு உற்பத்தி புரட்சி வாரம் இடம்பெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com