விவசாய தொழிநுட்ப கூட்டுறவுக்கு இலங்கையும் வியட்நாமும் இணக்கம்

2b0b49d35d3eb6f6df3dcb784b6e701d_Lஅரிசி மற்றும் ஏனைய பயிர்களுடன் தொடர்புடைய தொழிநுட்பம் மற்றும் விவசாயத்துறையில் நெருங்கிய கூட்டுறவை ஏற்படுத்துவதற்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசனவும் வியட்நாம் பிரதமர் Ngyuyn Xuan Phuc வும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
நேற்று (26) ஜப்பான் நகோயா டோக்கியோ ஹோட்டலில் நடைபெற்ற இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் போதே இந்த இணக்கம் எட்டப்பட்டது. வியட்னாமிய தொழில் முயற்சியாளர்களை இலங்கையில் முதலீடு செய்யுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

விவசாயம், தொழிநுட்பம், வர்த்தகம் மற்றும் முதலீடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கு தமது நாடு விரும்புவதாக வியட்னாம் பிரதமர் தெரிவித்தார். வருடாந்த வர்த்தக பெறுமதி 200 மில்லியன் டொலர்கள் வரை அதிகரித்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர் இதனை மேலும் அதரிகரிப்பதற்கான பல வாய்ப்புகள் இருப்பதாகவும் குறிப்பிட்டார். தாம் பிரதிப் பிரதமராக இருந்த சந்தர்ப்பத்தில் ஏற்கனவே மேற்கொண்டிருந்த சந்திப்பு குறித்து நினைவுகூர்ந்த வியட்நாம் பிரதமர் பிராந்திய மற்றும் சர்வதேச மன்றங்களில் வியட்நாமுடன் நெருங்கிய கூட்டுறவைப் பேணுவது தொடர்பில் இலங்கைக்கு நன்றி தெரிவித்தார்.

கடல்மார்க்க பாதுகாப்புக்கான இலங்கையின் பங்களிப்புகளை வலியுறுத்திய அவர், ஐக்கிய நாடுகள் சாசனத்தின் கடல் சட்டங்களின் கீழ் கடல்மார்க்கங்களின் பாதுகாப்பை மேலும் உறுதி செய்யும் வகையில் இரண்டு நாடுகளும் நெருங்கிப்பணியாற்ற முடியும் எனத் தெரிவித்தார். விவசாய அமைச்சர் என்ற வகையில் தாம் வியட்நாமுக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தை நினைவுகூர்ந்த ஜனாதிபதி சிறிசேன விவசாய, தொழிநுட்பத்தில் வியட்நாம் அடைந்திருக்கும் பாரிய அபிவிருத்திகளைப் பாராட்டியதோடு, இந்த தொழிநுட்ப அறிவைப் பகிர்ந்து கொள்வதில் இலங்கை பயணடைய முடியும் என்றும் தெரிவித்தார்.

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்ட வியட்நாம் பிரதமர், மிகவிரைவில் தாம் இலங்கைக்கு வியஜயம் செய்வதாகவும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com