சற்று முன்
Home / செய்திகள் / விழாக்கோலம் பூண்டாா் நீராவியடிப் பிள்ளையாா் – தமிழர் உரிமத்தை நிலைநாட்டும் தமிழர் திருநாள்

விழாக்கோலம் பூண்டாா் நீராவியடிப் பிள்ளையாா் – தமிழர் உரிமத்தை நிலைநாட்டும் தமிழர் திருநாள்

முல்லைத்தீவு- செம்மலை நீராவியடி பிள்ளையாா் ஆலயத்தில் தமிழா்களின் உாித்தை நிலைநாட்டும் 108 பானை பொங்கல் விழா களைகட்டியிருக்கும் நிலையில் ஆக்கிரமிக்கப்பட்ட கொக்கு தொடுவாய் கோட்டைக்கேணி பிள்ளையாா் கோவிலில் இருந்து அதிகாலை 3 மணிக்கு மடப்பண்டம் எடுத்துவரப்பட்டிருக்கின்றது.

ஆலயம் முழுவதும் முல்லைத்தீவு மாவட்ட மக்களாலும், வெளிமாவட்டங்களிலிருந்து பொங்கல் விழாவுக்காக சென்று தங்கியிருந்த மக்களாலும் அலங்காிக்கப்பட்டு இரவு முழுவதும் விழாக் கோலம் பூண்டிருக்கின்றது. நேற்று மாலை தொடக்கம் வெளிமாவட்டங்களிலிருந்து பெருமளவு இளைஞா்கள், பொதுமக்கள் ஆலயத்திற்கு வந்து கொண்டிருந்தனா்.

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று அதிகாலை 3 மணி அளவில் கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்தில் மடை பரவி பூசைகள் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து அங்கிருந்து மடப்பண்டம் எடுத்து வரப்பட்டு தற்போது நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கே தமிழர் திருவிழா பொங்கல் உற்சவங்கள் ஆரம்பமாகி இருக்கின்றது.

அந்த வகையில் தொடர்ந்து ஆலயத்திலேயே அபிஷேகம் மற்றும் வளர்ந்து நேர்ந்து பொங்கல் மற்றும் விசேட அம்சமாக சமூக வலைத்தள நண்பர்கள் ஆலய நிர்வாகத்தோடு இணைந்து நடத்துகின்ற 108 பானைகளில் பொங்குகின்ற பொங்கல் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுவருகின்றன.

இந்த நிலையில் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளுக்கு நூற்றுக்கு மேற்பட்ட பொலிஸார் கொண்டுவந்து குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு நிலையில் பொங்கல் நிகழ்வுகள் சிறப்புற இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன .

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com