விரைவில் உங்களை மீள்குடியேற்றுவேன் – மல்லாகத்தில் ஜனாதிபதி மைத்திரி

யாழ் வந்த (20.12.2015) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மல்லாகம் கோணப்புலம் நலன்புரி நிலைய மக்களை சந்தித்து உரையாடியதோடு அவர்களின் குடிசைகளிற்குள் சென்று அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். அதன்போது அங்கு ஒன்றுகூடிய மக்கள் 15 வடுமாக இடம்பெயர்ந்து முகாம்களில் வசிக்கும் எங்களை எங்கள் சொந்த இடங்களில் குடியமர்த்தினால் போதும் என கேட்டுக்கொண்டனர். அங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி விரைவாக உங்கள் மீள்குடியேற்றம் குறித்து நடிவடிக்கை எடுப்பேன் எனத் தெரிவித்தார்.

பின்னர் அரச நத்தார் விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி மக்களின் மீள்குடியேற்றம் 6 மாதகாலப்பகுதிக்குள் பூர்த்திசெய்யப்படும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com