விமானப் படை தளபதியாக கபில ஜயம்பதி நியமனம்

air_vice_marshal_jayampathy_12092016_kaa_cmyஎயார் வைஸ் மார்ஷல் கபில ஜயம்பதி எயார் மார்ஷலாக தரமுயர்த்தப்பட்டு இலங்கை விமானப் படையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இதுவரை காலம் விமானப் படைத் தளபதியாக செயற்பட்டு வந்த எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள தனது பதவி காலம் முடிந்து நேற்று ஓய்வு பெற்றுச் சென்றதையடுத்தே இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி விமானப் படையின் 16ஆவது தளபதியாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள எயார் மார்ஷல் கபில ஜயம்பதி 1982ஆம் ஆண்டு மார்ச் மாதம் 05ஆம் திகதி இலங்கை விமானப் படையில் கெடெட் அதிகாரியாக இணைந்துக் கொண்டுள்ளார். தனது ஆரம்ப பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்துக் கொண்ட அவர் 1985ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 01ஆம் திகதி பைலட் அதிகாரியாக வெளியேறியுள்ளார்.
இலங்கை விமானப் படையின் ஹிங்குரங்கொட தளத்தின் 7ஆம் இலக்க பிரிவினதும், 6ஆம் இலக்க எம்.ஐ – 17 ஹெலிகொப்டர் பிரிவினதும் கட்டளைத் தளபதியாகவும் 2009ஆம் ஆண்டு முதல் சீனக் குடா விமானப் படைத் தளத்தின் தளபதி உட்பட பல்வேறு முக்கிய உயர் பதவிகளை வகித்து வந்த அவர் சீனக்குடா தளம் இலங்கை விமானப் படையின் அகடமியாக தரமுயர்த்தப்பட்டவுடன் அதன் கட்டளைத் தளபதியாகவும் மீண்டும் நியமிக்கப்பட்டார்.
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்திலுள்ள பாகிஸ்தானுக்காக இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகராகவும் பதவி வகித்த இவர், அங்கீகாரமும் தரம் பெற்ற ஹெலிகொப்டர் பயிற்றுவிப்பாளரும் விமான ஓட்டுநரும் ஆவர்.
சீன பாதுகாப்பு பல்கலைக்கழகம் உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் பாதுகாப்பு துறை மற்றும் விமானத்துறை சார்ந்த கற்கை நெறிகளை மேற்கொண்டுள்ளார். கொழும்பு நாலந்தா கல்லூரியின் பழைய மாணவரான இவர் பாதுகாப்பு துறையின் உயர் விருதுகளான வீர விக்ரம விபூஷன, ரண விக்ரம பதக்கம் மற்றும் ரண சூர பதக்கம் என்பவற்றை பெற்றுக் கொண்டுள்ளார். இறுதியாக விமானப் படையின் வான் நடவடிக்கைகளுக்கான பணிப்பளராக கடமையாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com