வித்தியா கொலை வழக்கு – பொலிஸ் உயரதிகாரி கைது

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் பிரதான சூத்திரதாரியான சுவிஸ்குமார் தப்பித்து செல்ல உதவிய குற்றசாட்டின் கீழ் , முன்னாள் வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் குற்றதடுப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்ப்பட்டுள்ளார்.

வடமாகாண முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபரும் தற்போதைய மத்திய மாகாணபொலிஸ்மா அதிபருமான லலித் ஏ ஜெயசிங்கவே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் இன்று இரவு 10.30 மணியளவில் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com