விடுதலை புலிகளின் முன்னாள் உறுப்பினர் இனியவன் தென்மராட்சியில் சடலமாக மீட்பு

தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினரான இனியவன் என்றழைக்கப்படும் தர்மசேனா ரிசிகரன் சாவகச்சேரியில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று திங்கட்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
முன்னாள் விடுதலைப்புலிகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஜனநாயகப் போராளிகள் என்ற கட்சியின் தென்மராட்சி பிரதேச பொறுப்பாளராக இருந்த இனியவன், அந்தக் கட்சியின் சாவகச்சேரி அலுவலகத்திலேயே தூக்கில் தொங்கிய நிலையில் மரணமடைந்திருக்கின்றார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சடலத்தை மருத்துவ பரிசோதனைக்காக சாவகச்சேரி வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி காவல் துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளராகிய துளசியிடம் இனியவனின் மரணம் குறித்து கேட்டபோது, தமது கட்சி அலுவலகத்தில் அவர் சடலமாகக் கண்டு பிடிக்கப்பட்டதை உறுதிப்படுத்தியதுடன், அவருடைய மரணம் மர்மமாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.
ஜனநாயகப் போராளிகள் கட்சியினர் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டிருந்தனர். எனினும் வெற்றிபெறவில்லை.
முன்னாள் விடுதலைப்புலிகள் உறுப்பினர்களான 11 ஆயிரம் பேர் வரையில் இராணுவத்தினரிடம் சரணடைந்தும், இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டும் இருந்த நிலையில் அவர்கள் பல்வேறு புனர்வாழ்வுப் பயிற்சி முகாம்களில் இராணுவத்தினரின் பொறுப்பில் புனர்வாழ்வுக்கான பயிற்சியளிக்கப்பட்டு, சமூகத்தில் இணைக்கப்பட்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com