விடுதலைப் புலி சந்தேகநபர்களை சந்திப்பதற்கு அனுமதி கொடுத்தது யார்?-மைத்திரி

தடுப்புக்காவலில் உள்ள விடுதலைப் புலி சந்தேகநபர்களை சந்திப்பதற்கு, அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாத தடுப்பு தொடர்பான ஐ.நா. சிறப்பு அறிக்கையாளருக்கு அனுமதி வழங்கியது யாரென அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேள்வியெழுப்பியுள்ளார்.

ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்ஷன், அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை சென்று சந்தித்ததோடு, இலங்கையின் நீதித்துறை தொடர்பாக கடும் விமர்சனங்களையும் முன்வைத்துச் சென்றுள்ளார்.

இச் சம்பவம் சர்வதேச ரீதியில் பாரிய அதிர்வலைகளை தோற்றுவித்துள்ள நிலையில், நேற்றைய (செவ்வாய்க்கிழமை) அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளதோடு, புலிச் சந்தேகநபர்களை சந்திக்க அனுமதி வழங்கியது யாரென்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

எவ்வாறாயினும், இலங்கை வெளிவிவகார அமைச்சே இதற்கான அனுமதியை வழங்கியிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் சந்தித்தபோது இருவருக்கும் இடையில் காரசாரமான விவாதம் இடம்பெற்றிருந்த நிலையில், குறித்த சந்திப்பின் இடைநடுவில் ஐ.நா. பிரதிநிதி வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com