விடுதலைப் புலிகள் வன்முறையாளர்கள் – அவர்கள் மீளுருவாவதை விரும்பவில்லை !!

 

தமிழீழ விடுதலைப் புலிகள் வன்முறையாளர்கள் எனக் குறிப்பிட்டிருக்கும் ஸ்ரீலங்கா எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தமிழீழ விடுதலைப் புலிகள்மீள உருவாகுவதனை தாங்கள் விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

நாராளுமன்றில் வரவுசெலவுத்திட்டத்தின் மீதான விவாதத்தில் நேற்று முன்தினம் (20) கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். அவர்கள் வன்முறைாயாளர்கள். அவர்களின் பாதையை நாங்கள் விரும்பியிருக்கவில்லை. நாங்கள் வன்முறைகளை விரும்புபவர்கள் அல்ல என மேலும் குறிப்பிட்டிருக்கும் அவர் அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமே அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய இலங்கைக்குள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வுத் திட்டம் எட்டப்பட வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ள அவர் அரசில் கைதிகள் குறித்த பிரச்சினைக்கு விரைவில் காத்திரமான தீர்வுத் திட்டமொன்று எட்டப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com