விடுதலைப் புலிகளின் தொப்பி – லண்டனுக்கு அனுப்ப முற்பட்ட மூவருக்கு விளக்கமறியல்

தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சனை பொறிக்கப்பட்ட தொப்பியை விமானத் தபால் மூலம், லண்டனுக்கு அனுப்ப முற்பட்ட குற்றச்சாட்டில் கைதான மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை, கொழும்பு மேலதிக நீதவான் அருணி ஆடிகல, சந்தேகநபர்களை மார்ச் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதேவேளை, இவர்களில் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் புலனாய்வுப் பிரிவு உறுப்பினர் ஒருவரும் அடங்குவதாக தெரியவந்துள்ளது.

இதுஇவ்வாறு இருக்க, சந்தேகநபர்களுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்ய முடியாது என, அவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் வாதிட்டனர்.

எனினும் இதனை நீதவான் நிராகரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com