விடுதலைப் புலிகளின் தடை மீண்டும் நீடிப்பு….

ltteதமிழீழ விடுதலைப்புலிகளின் நிதி வலையமைப்பு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் செயற்படுவதன் காரணமாக அந்த அமைப்பு தொடர்ந்தும் தடைசெய்யப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

தீவிரவாதம் தொடர்பான அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட ஆண்டறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதி யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர், தமிழீழ விடுதலைப் புலிகளினால் இலங்கையில் எந்தவிதமான தாக்குதல்களும் மேற்கொள்ளப்படவில்லை.இருப்பினும், 2014ம் ஆண்டு மலேசியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் 13 பேர், இந்தியாவில் நிலைகொண்டுள்ள அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராஜதந்திரிகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டார்கள் என சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015ம் ஆண்டு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் நடவடிக்கைகளுக்காக நிதி சேகரித்தார் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds