விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்களை அழிக்க தலைமைதாங்கினேன்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்களை அழித்தொழிப்பதற்கு நானே தலைமைதாங்கினேன். ஆனால் அந்த நேரம் எனது பெயர் வெளியில் வரவில்லை. அவ்வாறு வந்திருக்குமாயின் விடுதலைப் புலிகளால் நானும் , எனது குடும்பத்தினரும் அழிக்கப்பட்டிருப்போம் என 22ஆவது சிறிலங்கா கடற்படைத்தளபதியாக பொறுப்பேற்றுள்ள வைஸ் அட்மிரல் சின்னையா தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

புலிகளின் ஆயுதப் படகுகள் அழிக்கப்பட்டதன் பின்னணியில் எனது தலைமைத்துவம் இருந்தது. புலிகளின் 10 அதி நவீன ஆயுதக் கப்பல்களை நாம் அழித்த போது இந்த செய்தி வெளியில் வரவில்லை.

ஆனால் அவர்களின் படகுகளை அழித்தமையே புலிகளின் கடற்படை பலத்தை குறைக்க பிரதான காரணமாக அமைந்தது.இந்த செயற்பாட்டில் எனது பெயர் வந்திருக்குமாயின் எனக்கு மட்டுமல்ல எனது குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தலாக இருந்திருக்கும்.

எனது குடும்பத்தினர் தனிமையில் கண்டியில் இருந்தனர். நான் முழு நேரமாக கடற்படையில் என்னை ஈடுபடுத்தி இருந்த காரணத்தினால் அவர்களுக்கு பாதுகாப்பு குறைவாகவே இருந்தது.

இந்நிலையில் எம்மால் இந்த செயற்பாடுகள் இடம்பெற்றது என்பது தெரிய வந்திருக்குமாயின் எமக்கு அச்சுறுத்தலாக மாறியிருக்கும். எனினும் எனது பெயர் வெளியில் வரவில்லை.

நான் மட்டும் அல்ல என்னைப்போல் பலர் யாரென்று தெரியாத நிலைமைகள் இன்றும் உள்ளது. என்னுடன் கடமையாற்றிய பலர் இன்றும் அடையாளம் காட்டிக்கொள்ளாது சேவையாற்றி வருகின்றனர்.

இன்றும் எமக்கு அச்சுறுத்தல் உள்ளது. எனினும் நாம் எம்மை பாதுகாத்துக் கொள்ளகூடிய நிலையில் உள்ளோம். பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லாத காரணத்தினால் எமக்கு அழுத்தங்கள் இல்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com