சற்று முன்
Home / செய்திகள் / விடுதலைப்புலிகளையும் ஜேவிபியையும் ஒப்பிட்டுப் பேசவேண்டாம் என்கிறார் அமைச்சர் சம்பிக்க

விடுதலைப்புலிகளையும் ஜேவிபியையும் ஒப்பிட்டுப் பேசவேண்டாம் என்கிறார் அமைச்சர் சம்பிக்க

தமிழீழ விடுதலைப் புலிகளையும், ஜே.வி.பியினரையும் ஒப்பீடு செய்ய முடியாது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். அத்திட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற படைவீரர் நினைவு நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜே.வி.பியினர் பெரும் எண்ணிக்கையிலான அரசியல் படுகொலைகளை செய்துள்ள போதிலும், மத வழிபாட்டுத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதில்லை எனவும், கூட்டுப் படுகொலைகளை மேற்கொள்ளவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் சில தரப்பினர் புலிகளின் பயங்கரவாத செயற்பாடுகளை வீர தீரச் செயல்களாக கருதுகின்ற போதிலும் அவர்கள் தொடர்பில் ஏனைய மக்கள் புத்திசாதூரியமான தீர்மானங்களை எடுக்க வேண்டுமே தவிர பதற்றமடையக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் தமிழ் அரசியல் கைதிகள் எவரும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com