விஜே­தாஸ இன்று பதவி விலகுவார்?

நீதி  மற்றும்  புத்­த­சா­சன அலு­வல்கள்  அமைச்சர் விஜே­தாஸ ராஜபக் ஷ இன்­றைய தினம் தனது அமைச்சர் பத­வியை இரா­ஜி­னாமா செய்யும் சாத்­தியம் இருப்­ப­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அந்­த­வ­கையில் அமைச்சர் விஜே­தாஸ ராஜபக் ஷ இன்­றைய தினம் தனது இரா­ஜி­னாமா கடி­தத்தை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் கைய­ளிப்பார் என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

மேலும் நேற்­றைய தினம் மாலை அலு­வ­ல­கத்­திற்கு சென்­றி­ருந்த அமைச்சர் விஜே தாஸ ராஜபக் ஷ அங்­கி­ருந்த தனது கோப்­புக்­களை எடுத்துச் சென்­ற­தா­கவும்

தக­வல்கள் தெரி­வித்­தன. அதன்­படி பார்க்கும் போது இன்­றைய தினம் அமைச்சர் விஜ­ய­தாஸ ராஜபக் ஷ தனது அமைச்சுப் பத­வியை இரா­ஜி­னாமா செய்வார் என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

அதா­வது விஜே­தாஸ ராஜபக் ஷவை அமைச்சுப் பத­வி­யி­லி­ருந்து நீக்­கு­மாறு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்­று­முன்­தினம் இரவு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் கோரிக்கை விடுத்­தி­ருந்தார். அதற்­க­மைய அமைச்­சரை பதவி நீக்­கு­வ­தற்கு அர­சாங்க மட்­டத்தில் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­ட­தாக தெரி­கி­றது.

உதா­ர­ண­மாக தேசிய நல்­லாட்சி அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்­கின்ற ஐக்­கிய தேசிய முன்­ன­ணியும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் அமைச்சுப் பத­வி­களை பகிர்ந்து கொண்­டுள்­ளன. அந்­த­வ­கையில் நீதி­ய­மைச்­சா­னது ஐக்­கிய தேசியக் கட்­சி­யிடம் இருக்­கி­றது. எனவே அந்த அமைச்சுப் பத­வியை மாற்றி வேறு ஒரு­வ­ருக்கு  வழங்­கு­மாறு ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைவர் கூறு­மி­டத்து அதனை ஜனா­தி­பதி செவி­ம­டுத்தே ஆக­வேண்­டிய நிலைமை காணப்­ப­டு­கி­றது. எனவே தற்­போது ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஜனா­தி­ப­தி­யிடம் அமைச்சர் விஜ­ய­தா­ஸவை  பதவி நீக்­கு­மாறு கோரி­யுள்­ளதால் அவர் இன்­றைய தினம் இரா­ஜி­னாமா செய்வார் என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

ஆரம்­பத்தில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் பின் வரிசைப் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அமைச்சர் விஜே­தாஸ ராஜபக் ஷ பதவி வில­கு­மாறு வலி­யு­றுத்தி வந்­த­துடன் அழுத்­தங்­க­ளையும் பிர­யோ­கித்து வந்­தனர். எனினும் தான் எக்­கா­ரணம் கொண்டும் இரா­ஜி­னாமா செய்­ய­மாட்டேன் என அமைச்சர் விஜே­தாஸ ராஜபக் ஷ தெரி­வித்­தி­ருந்தார். அத்­துடன் நான்கு பௌத்த பீடங்­க­ளையும் சேர்ந்த தேரர்­களும் அமைச்சர் விஜே­தாஸ ராஜபக் ஷவுக்கு தமது ஆத­ரவைத் தெரி­வித்­தி­ருந்­தனர். அது­மட்­டு­மன்றி கடந்த வாரம் நடை­பெற்ற ஐக்­கிய தேசியக் கட்­சியின் செயற்­குழுக் கூட்­டத்­திலும் அமைச்சர் விஜேதாஸ ராஜ­ப­க்ஷ­வுக்கு எதி­ராக கடும் விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்­டன. அதா­வது அமைச்­ச­ரவை கூட்­டுப்­பொ­றுப்பை மீறி அமைச்சர் விஜே­தாஸ ராஜபக் ஷ செயற்­பட்­டுள்­ளதால் அவர் பதவி விலக வேண்டும் என ஐக்­கிய தேசியக் கட்­சியின் எம்.பி.க்கள் வலி­யு­றுத்தி வந்­தனர். அதன்­படி அமைச்சர் மீதான குற்­றச்­சாட்­டுக்­களை ஆராய எம்.பி.க்களான மங்­கள சம­ர­வீர, மலிக் சம­ர­விக்­கி­ரம மற்றும் ரவீந்­திர சம­ர­வீர ஆகிய மூவர் கொண்ட குழு நிய­மிக்­கப்­பட்­டது. அக்­கு­ழுவின் அறிக்கை நேற்று முன்­தினம் மாலை பிர­த­ம­ரிடம் கைய­ளிக்­கப்­பட்­டது. அதன் பின்­னரே அமைச்சர் விஜ­ய­தா­ஸவை பதவி நீக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

ஏற்கனவே நீதியமைச்சருக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வர முயற்சித்தனர். எனினும் பிரதமர் ரணில் விக்கரமசிங்கவின் தலையீட்டை அடுத்து அந்த முயற்சி கைவிடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com