”விஜய் , அஜித் யாருக்கு முதலிடம்” – ஸ்ரீதிவ்யா ஜாலி பேட்டி!

எங்க டீம நான் ரொம்ப மிஸ் பண்றேன். ஒரே கலாட்டா தான் ஜாலி டீம் …. பெங்களூர் நாட்கள் டீஸர் லான்ச் , செம குஷியாக பேசினார் ஸ்ரீதிவ்யா…
”படம் எப்படி வந்துருக்கு”…
”உண்மையச்  சொன்னா மலையாளப் படத்த நான் ஒரே ஒரு தடவ தான் பார்த்தேன். அப்பதான் என்னோட ஸ்டைல்ல நடிக்க முடியும்ங்கறதுக்காக”. இந்தப் படம் உங்க எல்லாருக்கும் ரொம்பப் பிடிக்கும் ”
”நீங்க ரொம்ப அமைதியான ஆளாச்சே…இந்த படத்தோட கேரக்டர் கொஞ்சம் துறுதுறுன்னு இருக்கணுமே”
”ஆமா…அதுக்குத்தான் நான் ரொம்ப கஷ்டப்பட்டேன்.. ஆனாலும் நான் வீட்ல எப்படி இருந்தேனோ அப்படித்தான் செட்ல இருந்தேன்”
”ஆர்யா, ராணா, பாபி சிம்ஹா, பார்வதினு படம் முழுக்க யூத் டீம். ஷூட்டீங் ஸ்பாட் எப்படி இருந்துச்சு?”
”ஆர்யா, ராணா, பாபி சிம்ஹாலாம் சேர்ந்து என்ன அழ வெச்சிட்டாங்க… அவ்ளோ கலாட்டா… சத்தியமா இந்த டீம நான் ரொம்ப மிஸ் பண்றேன்!”
”உங்க ஹீரோக்கள் பத்தி சொல்லுங்களேன்!”
”ஆக்சுவலி நான் ராணாவ முதல்ல பார்த்தோன பயந்துட்டேன், பல்லாள தேவாவா வேற பாகுபலில பார்த்துட்டேனா, ஆனா டோட்டலி அவரு வேற… செம கேஷுவல். படத்துலயும் அப்படிதான் ரொம்ப ஸ்டைலான ராணாவ பாக்கப்போறீங்க.,. அப்பறம் ஆர்யா சொல்லவா வேணும் எப்போ பார்த்தாலும் கலாய்ச்சுட்டு, செட்ட ஜாலியாவே வெச்சுருந்தாரு. பாபி சிம்ஹாவும் அப்படிதான் இதுவரைக்கும் வில்லன், அடிதடின்னு பார்த்தோம் . இப்ப புது பாபி சிம்ஹாவ பார்க்கப் போறோம்”
”பென்சில் என்ன ஆச்சு…”
“நானும் உங்கள மாதிரியே வெயிட் பண்றேன். கூடிய சீக்கிரம் வரும். சின்ன பிரச்னை தான் முடிஞ்சுடும்”
”ஸ்கூல் ஸ்டூடண்டா ரெண்டு படத்துல நடிச்சிட்டீங்களே…. அதனால் ப்ளஸ் ,மைனஸ் என்னவா நினைக்கிறீங்க?”
“ப்ளஸ் நான் ஃபிட்டா இருக்கேனு ஒரு கான்ஃபிடண்ட் இருக்கு, மைனஸ் கொஞ்சம் பெரிய, சவாலான ரோல்ஸ் வர மாட்டேங்குது!”
”உங்க சினிமா ட்ரீம்?”
”மணிரத்னம் சார் படத்துல நடிக்கணும், அவர எனக்கு ரொம்ப பிடிக்கும்… அப்பறம் மௌன ராகம் ரேவதி மாதிரி ஒரு கேரக்டர் பண்ணனும்!”
”அடுத்த படங்கள் பத்தி சொல்லுங்களேன்?”
”பெங்களூர் நாட்கள் வரப் போகுது , அடுத்துகஷ்மோரா. இன்னும் ரெண்டு புராஜெக்ட் பேசிகிட்டு இருக்காங்க”
”கஷ்மோராவுல நயன்தாரா இருக்காங்களே… உங்களுக்கான ஸ்கோப் கம்மியா இருக்குமே?”
”அந்தப் படத்த நான் ஏன் ஒத்துக்கிட்டேனு படம் வந்தோன உங்களுக்கே தெரியும் பாருங்களேன். எப்பவுமே என்னோட கேரக்டர் கேட்டு எனக்கு ஓகேன்னா தான் நான் ஒத்துப்பேன். அப்படி தான் கஷ்மோரா படமும்!”
”ஒரு வம்பான கேள்வி…. அஜித், விஜய் படம் ஒரே நேரத்துல வருது ஒரு படத்துல தான் நடிக்கணும். என்ன செய்வீங்க!”
”ஹய்யோ!.. இப்படி கோர்த்து விட்டுட்டீங்களே…. சத்தியமா நைட்டு பகல்னு வேலை செஞ்சாவது ரெண்டையும் சேர்த்து முடிச்சுடுவேன். ரெண்டு பேர் படமும் ரொம்ப முக்கியமாச்சே. ஆனால் நான் அஜித் சாருக்கு செட்டாவேனான்னே தெரியல, அவருக்கு தங்கச்சியா நடிக்கக் கூட வேதாளம் படத்துல கேட்டாங்க. நான் நடிக்கல!”
அஜித் சாருக்கு எப்படிங்க தங்கச்சியா நடிக்க முடியும்…..  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com