சற்று முன்
Home / செய்திகள் / விசேட ஒன்றிணைந்த இடர் செயற்பாட்டு பிரிவு தயார் நிலையில்.

விசேட ஒன்றிணைந்த இடர் செயற்பாட்டு பிரிவு தயார் நிலையில்.

ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் விசேட ஒன்றிணைந்த இடர் செயற்பாட்டு பிரிவு ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தில் இந்த பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் ஏதேனும் இடர் ஏற்படும் பட்சத்தில் தேர்தல் நடவடிக்கைகளுக்கு ஏற்படக்கூடிய தடையை தவிர்ப்பதற்காக இந்த பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு, அரச நிர்வாகம், இடர் முகைமைத்துவம் மற்றும் கால்நடை வள அபிவிருத்தி அமைச்சு மற்றும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் முப்படை, பொலிஸார் உள்ளிட்ட அனைத்து தரப்பு நிறுவனங்களையும் தொடர்புபடுத்தி இந்த செயற்பாட்டு பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் காலப்பகுதியில் ஏதேனும் அனர்த்த நிலையினால் தேர்தலுக்கு பாதிப்பு ஏற்படுமாயின் அல்லது அவ்வாறான அனர்த்த நிலையின் காரணமாக வாக்களிப்பதற்கு பாதிப்பு ஏற்படுமாயின் இடர் முகாமைத்தவ மத்திய நிலையத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள விசேட ஒன்றிணைந்த இடர் செயற்பாட்டு பிரிவில் 0702 117 117 / 0113 668 032 / 0113 668 028 / 0113 668 019 / 0113 668 030 என்ற தொலைபேசியின் ஊடாக தொடர்பு கொள்ள முடியும்.

அல்லது இடர் முகாமைத்து மத்திய நிலையத்தின் அவசர செயற்பாட்டிற்கான தொலைபேசி இலக்கம் 117 இற்கு தொடர்பு கொண்டு பொது மக்கள் அனர்த்தம் தொடர்பான தகவல்களை அறிவிக்க முடியும் என இடர் முகாமைத்து மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com