விசேட அதிரடிப்படையினரின் வாகனத்தின்மீது துப்பாக்கிச்சூடு!

நீர்கொழும்பு, குரான பிரதேசத்தில்   விசேட அதிரடிப் படையின் ஜீப் வண்டி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.  இச்சம்பவம் இன்று (12)மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வான்  ஒன்றில் வந்த இனந்தெரியாத குழுவொன்றினால் இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் விசேட அதிரடிப் படையினர் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களின் இரண்டு பேர் காயமடைந்துள்ளதுடன், சந்தேக நபர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com