விசாரணைக்கு அழைக்கப்பட்டவர் கொழும்பில் கைது

இன்றைய தினம் (19) விசாரணைக்காக கொழும்பு 2 ஆம் மாடிக்கு அழைக்கப்பட்ட முல்லைத்தீவு ஜீவநகரை சேர்ந்த முத்துலிங்கம் ஜெயகாந்தன் (36 வயது) பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் கடந்த 2013ஆம் ஆண்டு தொழிலின் நிமித்தம் மத்திய கிழக்கு நாட்டிற்கு சென்று கடந்த 12ஆம் திகதி நாடு திரும்பிய நிலையில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து விசாரணை செய்யப்பட்டார்.

பின்னர் மேலதிக விசாரணைக்காக கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வு அலுவலகத்திற்கு சென்ற அவர் இன்று பிற்பகல் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி எ.டொமினிக் பிறேமானந் தெரிவித்துள்ளார்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், கைதுசெய்யப்பட்டமைக்கான காரணம் தெரியவில்லை எனவும், இந்த விடயம் தொடர்பாக கொழும்பில் அமைந்துள்ள மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளதாகவும் சட்டத்தரணி டொமினிக் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கைதுசெய்யப்பட்ட நபர் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் என குற்றப்புலனாய்வுப் பொலிஸார் தெரிவித்தனர்.download

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds