விசாரணைக்காலத்தை நீடிப்பதற்கு ஜனா­தி­ப­திக்கு அதிகாரம் இல்லை!

பிணை­முறி தொடர்பில் விசா­ரணை செய்யும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் விசா­ர­ணை க்­கா­லத்தை நீடிப்­ப­தற்கு ஜனா­தி­ப­திக்கு அதி­காரம் இல்லை. அவ­ருக்கு அறிக்­கையை நீடிப்­ப­தற்­கான அதி­கா­ரமே உள்­ளது.

ஆணைக்­கு­ழுவின் விசா­ரணை காலத்தை நீடிப்­ப­தற்கு வர்த்­த­மானி அறி­வித்­தல் வெளி­யி­டப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். ஆனால் ஏப்ரல் மாதத்தில் மீண்­டு­மொரு தவணைக் காலத்­துக்கு

தவ­ணையை நீடிப்­ப­தற்கு வர்த்­த­மானி  வெளி­யி­டப்­ப­ட­வில்லை. எனவே சட்­டத்­தின்­படி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தவ­றி­ழைத்­து­விட்­ட­தாக அர்ஜூன் அலோ­சியஸ் சார்பில் வாதா­டிய சட்­டத்­த­ரணி காலிங்க இந்­தி­ர­திஸ்ஸ நேற்று ஜனா­தி­ப­தி­ஆ­ணைக்­கு­ழுவில்  தெரி­வித்தார்.

சர்ச்­சைக்­கு­ரிய பிணை­முறி விவ­காரம் தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் விசா­ர­ணைகள் இறுதி கட்­டத்தை நெருங்­கி­யுள்ள போதிலும் தொடர்ந்தும் பலரை விசா­ர­ணைக்­குட்­படுத்த வேண்டும் என ஆணைக்­குழு அறி­வித்­த­மையால் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன குறித்த முடிவை எடுத்­தி­ருந்தார்.

இந்­நி­லையில் நேற்று 10. 30 க்கு கூடிய ஆணைக்­கு­ழுவில் சட்­டத்­த­ரணி காலிங்க இந்­தி­ர­திஸ்ஸ இரண்டு   விண்­ணப்­பங்­களை முன்­வைத்­தி­ருந்தார். இதன்­போது ஆணைக்­கு­ழுவின் பத­விக்­கா­லத்தை மீண்டும் நீடித்­தி­ருப்­பது தவறு என்­பதை சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

இதன்­போது குறுக்­கிட்டு வாதிட்ட அரச சட்­டத்­த­ரணி டப்­புல லிவேரா ஆணைக்­கு­ழுவின் விசா­ர­ணைக்­கா­லத்தை நீடிக்க தாமே ஜனா­தி­ப­தி­யிடம் கோரி­யி­ருந்­த­தா­கவும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் ஆணைக்­கு­ழு­வுக்கு  எழுத்­து­மூலம் அறி­வித்­தி­ருந்த­தா­கவும் குறிப்­பிட்டார்.

ஆணைக்­கு­ழுவின் விசா­ர­ணைக்­கா­லத்தை நீடிக்க வர்த்­த­மானி வெளி­யி­டப்­பட வேண்­டி­யது கட்­டா­ய­மான­தல்ல எனவும் சட்டம் முறை­யாக பின்­பற்­றப்­ப­டு­கின்­றது எனவும் அவர் மேலும் தெரி­வித்தார்.

இவ்­வ­ருடம் ஜன­வரி மாதம் ஆரம்­ப­மா­கிய ஆணைக்­கு­ழுவின் கால எல்லை ஏப்ரல் 27 ஆம் திக­தி­யுடன்நிறை­வ­டை­ய­வி­ருந்த நிலையில் அதனை ஜூலை 27 ஆம் திகதி வரை நீடிக்க தீர்­மா­னிக்­கப்­பட்­டது. அந்த காலவரை­ய­றையும் இம்­மாதம் 27 ஆம் திக­தி­யோடு நிறை­வ­டை­ய­வுள்ள நிலையில் தற்­போது மேலும் மூன்று மாதங்கள், அதா­வது ஒக்­டோபர் 27 ஆம் திகதி வரை ஆணைக்­கு­ழுவின் செயற்­பா­டு­களை நீடிக்க தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

மத்­திய வங்­கியில் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் பிணை முறி மோசடி விவகாரம் தொடர்பில் விசாரணை செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உயர் நீதிமன்ற நீதியரசர் கே.டீ. சித்திரசிறி, பி.எஸ் ஜெயவர்தன மற்றும் ஓய்வுபெற்ற பிரதி கணக்காய்வாளர் நாயகம் வேலுப்பிள்ளை கந்தசாமி அடங்கிய மூன்றுபேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com