சற்று முன்
Home / செய்திகள் / விக்கி, கஜேந்திரகுமார், சுரேஸிடம் விடும் சேட்டையை என்னிடம் காட்டவேண்டாம் – சுமந்திரனுக்கு மனோ எச்சரிக்கை

விக்கி, கஜேந்திரகுமார், சுரேஸிடம் விடும் சேட்டையை என்னிடம் காட்டவேண்டாம் – சுமந்திரனுக்கு மனோ எச்சரிக்கை

மரங்கொத்திப் பறவை எல்லா மரங்களையும் கொத்தி துளைத்த துணிச்சலில் வாழை மரத்தை கொத்தி மாட்டிக் கொண்ட கதையைபோல் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சிலரை பேசும் துணிச்சலில் என்னையும் பேச எத்தணிக்கின்றார் என தேசிய மொழிகள் மற்றும் நல்லிணக்க அமைச்சர் மனோகணேசன் கூறியுள்ளார்.

யாழ்.குடாநாட்டுக்கு இன்று விஜயம் செய்த அமைச்சர் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊ டகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தொவித்தபோதே மேற்கண்டவாறு கூறினார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,

தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் என்னுடன் பகைமை பாராட்டி வருகின்றார். ஆயுதப் போராட்டங்களின் ஆரம்பங்களில் பகை முரண்பாட்டையும், நட்பு முரண்பாட்டையும் ஆயுத போராட்டங்களின் தலைவர்கள் சரியாக உணர்ந்து கொள்ள தவறியமையால் ஒருவருக் கொருவர் மோதிக் கொண்டார்கள். அவ்வாறு பல கட்சிகள் இருக்கலாம் அவர்களுக்கிடையில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அவை பகை முரண்பாடாக அமைந்து விடக்கூடாது. அவை நட்பு முரண்பாடாக அமையவேண்டும். எப்படி ஆயுத போராட்ட இயக்கங்கள் ஒருவருக்கொருவர் பகை முரண்பாட்டை வளர்த்துக் கொண்டமையால் ஒட்டுமொத்தமாக ஒரு இனத்தையே அது பாதித்ததோ, அவ்வாறே இப்போது கட்சிகளுக்கிடையிலான பகை முரண்பாடும் இனத்தை பாதிக்கும்.

வரலாற்றில் இருந்து நாங்கள் தெளிவடைய வேண்டும். வரலாறு தெரியாவிட்டால் தெரிந்து கொள்ளவேண்டும். நான்தான் எல்லாவற்றையும் செய்யவேண்டும், எனக்குதான் எல்லாம் தெரியும் என்ற மனோநிலையில் இருக்க கூடாது. நான் அனைவருக்கும் நண்பன். கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்.மாவட்டத்தில் மாதிரிக் கிராமம் ஒன்று கையளிக்கும் நிகழ்வில் சில கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.

சஜித் பிறேமதாஸ என்னுடைய நண்பன். நான் அமைச்சர் சபையில் வடகிழக்கு மக்களுக்கு வீட்டு திட்டங்கள் கொடுக்கப்படவேண்டும். என சண்டையிட்டவன். அதனடிப்படையில் அமைச்சர் சஜித் பிறேம தாஸ மாதிரி கிராமங்களை உருவாக்கி வருகின்றார். ஆனால் அவருடைய மாதிரி கிராம திட்டத்திற்கும் எனது வீட்டு திட்டங்களுக்கும் நிறைய வித்தி யாசங்கள் இருக்கின்றன. ஆயிரக்கண க்கான வீட்டு திட்டங்களை நாங்கள் அமைக்கவுள்ளோம். ஒவ்வொன்னும் 12 லட்சம் பெறும ஸ்ரீதியான அரச நன்கொடையில் கட்டப்படவுள்ளன.

மேலும் நான் நல்லிணக்க அமைச்சை பொறுப்பேற்று 2 மாதங்களே ஆகின்றது. ஆகவே இதற்கு முன்னர் இடம்பெற்ற தவறுகளுக்கு நான் பொறுப்பாளி அல்ல. மரங்கொத்தி பறவை எல்லா மரங்களையும் கொத்தி துளைத்த துணிச்சலில் வாழை மரத்தை கொத்தி மாட்டிக் கொண்ட கதைபோல் முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனுடனும், கஜேந்திரகுமார் பொன்னபலத்துடனும், சுரேஸ் பிறேமச்சந்திரனுடனும் பேசுவ துபோல் என்னுடன் பேச எத்தணிக்க கூடாது.

நான் மனோகணேசன். நான் சீ.வி.விக்னேஸ்வரனோ, கஜேந்திரகுமார் பொன்னம்பலமோ, சுரேஸ் பிறேமச்சந்திரனோ அல்ல. கொடுங்கோல் ஆட்சி நடந்து கொண்டிருந்தபோதே நான் அநியாயங்களுக்கு எதிராக பேசியவன். நீங்கள் அரசுக்கு உள்ளே ஆளுங்கட்சி வெளியே எதிர்கட்சி, நான் அரசுக்கு உள்ளே எதிர்கட்சி வெளியேதான் ஆளுங்கட்சி என்பதை உணரவேண்டும். பகை முரண்பாட்டுடன் என்னை சந்திக்காதீர்கள். நல்லவேளை ஆயுதங்கள் இல்லை. இருந்திருந்தால் என்னை கொன்றிருப்பார்கள் போலும் எனவும் கூறினார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

எழுச்சிப் பாடகர் வர்ண ராமேஸ்வரன் அவர்கள் சாவடைந்தார்

நெஞ்சை உருக்கும் மாவீரர் நாள் பாடலான ‘மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி’ ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com