சற்று முன்
Home / செய்திகள் / விக்கியின் புதிய அரசியல் பிரவேசம் – புறக்கணித்தது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

விக்கியின் புதிய அரசியல் பிரவேசம் – புறக்கணித்தது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி


வடக்கு மாகாண சபை இன்று நள்ளிரவுடன் கலைக்கப்படவுள்ள நிலையில் வடக்கு மாகாண முதலமைச்சரின் அடுத்தகட்ட அரசியல் நிலைப்பாடுகள் குறித்து அறிவிப்பதற்கென தமிழ் மக்கள் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இன்றைய மக்கள் எழுச்சிக் கூட்டத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி புறக்கணித்துள்ளது.

முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் புதிய அரசியல் கட்சி ஒன்றை உருவாக்குவார் என முன்னமே எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்துவரும் மாகாணசபைத் தேர்தல் உள்ளிட்ட தேர்தலிகளில் அவர் யார் யாருடன் கூட்டணி வைப்பார் ? அதன்போது தங்களின் பங்களிப்பு என்ன என்பது உள்ளிட்ட விடையங்களில் தெளிவு ஏற்படாத நிலையில் இன்றைய மக்கள் எழுச்சிக் கூட்டத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி புறக்கணித்திருந்ததாக தெரியவந்துள்ளது.

தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் தரப்புக்களும் இன்றைய நிகழ்வில் பங்கேற்றவேண்டும் என விரும்பியிருந்த இன்றைய நிகழ்வின் ஏற்பாட்டாளர்களான தமிழ் மக்கள் பேரவையினர் இன்றைய நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்களைப் பங்கேற்கவைப்பதற்காக நேற்று இரவு அவர்களுடன் சந்திப்பு ஒன்றினை ஏற்படுத்தியிருந்ததாகவும் எனினும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இன்றைய நிகழ்வில் பங்கேற்க மறுத்துவிட்டதாக பேரவை முக்கியஸ்தர் ஒருவர் வாகீசத்திற்குத் தெரிவித்தார்.

இந்நிலையில் தமிழ்மக்கள் பேரவையில் அங்கம்வகிக்கும் புளொட் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம்வகிப்பதால் முதலமைச்சரின் அரசியல் நிலைப்பாடுகளை அறிவிக்கும் நிகழ்வில் பங்கேற்பது தமக்குஏற்புடையதல்ல எனக் கருதியே புளொட் கட்சியில் தலைவர் சித்தார்த்தனும் இன்றைய நிகழ்வில் பங்கேற்றிருக்கவில்லை எனக் கூறப்படுகின்றது.

இன்றைய நிகழ்வில் ஈபிஆர்எல்எவ் சார்பில் கட்சித் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன்உள்ளிட்டோரும் தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் ஐங்கரநேசன் மற்றும் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் அனந்தி சசிதரன், வலி வடக்கு பிரதேச சபையின் தமிழரசுக்கட்சி உறுப்பினர் சஜீவன் உள்ளிட்ட அரசியல் தரப்பினர் கலந்துகொண்டிருந்தனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

எழுச்சிப் பாடகர் வர்ண ராமேஸ்வரன் அவர்கள் சாவடைந்தார்

நெஞ்சை உருக்கும் மாவீரர் நாள் பாடலான ‘மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி’ ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com