விக்கினேஸ்வரன் தாளத்திற்கு ஆட முடியாது – அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க

clnfXHeUranj-300x200வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் போடும் தாளத்திற்கு ஏற்ற வகையில் ஆட்டம் போடுவதற்கு இடமளிக்க முடியாது என சமூக நலன்புரி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

இரனைமடுவில் பௌத்த சிலை நிர்மாணிப்பதனை தடுக்குமாறு கோரி வடக்கு மாகாணசபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த விடயம் குறித்து சிங்கள பத்திரிகையொன்றுக்கு கருத்து வெளியிட்ட போது இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,
வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு தேவையான வகையில் செயற்படுவதற்கு அரசாங்கம் எந்த வகையிலும் தயாரில்லை.
இரணைமடு என்பது தமிழர்களுக்கு மட்டும் சொந்தமான பகுதி என நினைப்பது அவர்களின் முட்டாள்தனமாகும்
மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் அவற்றை அமுல்படுத்த அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை.
முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு தேவையான வகையில் ஆடவிட்டு அரசாங்கம் என்ற ரீதியில் நாம் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க மாட்டோம்.
இதற்கு முன்னரும் பிரபாகரனின் சிலையை அமைப்பதற்கு சிலர் முயற்சித்தனர்.இவை எல்லாம் வடக்கு மக்களின் மத்தியில் பிரபல்யம் அடைவதற்காக மேற்கொள்ள முயற்சிகளாக மட்டும் கருதப்பட வேண்டும்.
இரணைமடுவில் இராணுவத்தினர் பௌத்த சிலை அமைப்பது அரசாங்க காணியிலாகும்.
இன்னமும் அரசாங்கத்திடமே காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் காணப்படுகின்றன.
இலங்கையில் 70 வீதமான மக்கள் சிங்கள பௌத்தர்களாகும்.வட மாகாணசபையில் இவ்வாறான முட்டாள்தனமான செயற்பாடுகளை செய்தாலும், மத்திய அரசாங்கம் இவ்வாறான கருத்துக்களை வெறும் வொய்ஸ் கட்டாக மட்டுமே பார்க்கும் என ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com