சற்று முன்
Home / செய்திகள் / விகாரைக்கு அனுமதியில்லை – முதலமைச்சர் திட்டவட்டம்

விகாரைக்கு அனுமதியில்லை – முதலமைச்சர் திட்டவட்டம்

வடக்கில் முன் அனுமதிகள் எவையும் பெறப்படாது தான்தோன்றித்தனமாக விகாரைகளை அமைக்க முடியதொன வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். நாவற்குழியில் அனுமதிகள் பெறப்படாது விகாரை அமைப்பது போன்றே முல்லைத்தீவிலும் அனுமதியில்லாமல் விகாரைகள் அமைக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு மாகாண சபையின் 93 ஆவது அமர்வு நேற்று அவைத் தலைவர் சிவஞானம் தலைமையில் நடைபெற்ற போது நாவற்குழியில் அமைக்கப்படுகின்ற விகாரை குறித்து கொண்டு வரப்பட்ட கவனயீர்ப்பு பிரேரணையின் போது கருத்து வெளியிடுகையிலேயே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்.

நாவற்குழியில் சிங்கள மக்களய் குடியமர்ந்திருக்கின்ற பகுதியில் சிங்கள மக்களுக்கு ஆசி கூறுவதற்காக 300 பௌத்த பிக்குமார்கள் வருகை தர இருப்பதாகவும் அதன் போது எனக்கு கறுப்புக் கொடி காட்ட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவ்வாறு எதுவும் இன்றையதினம்(நேற்று) நடக்கவில்லை.
தற்போது நாவற்குழிய விகாரை அமைப்பது குறித்தப் பேசப்படுகிறது. நாவற்குழியைப் போன்றே முல்லையிலும் விகாரைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. வடக்கில் விகாரைகள் அமைப்பதில் உரிய அனுமதிகள் பெறப்படாது தான்தோன்றித்தனமாகச் செயற்படக் கூடாதென்று கேட்டுக் கொண்டார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com