சற்று முன்
Home / செய்திகள் / வாள்வெட்டு கும்பல்களுக்காக சட்டத்தரணிகள் ஆஜராகக் கூடாது – வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர்

வாள்வெட்டு கும்பல்களுக்காக சட்டத்தரணிகள் ஆஜராகக் கூடாது – வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர்

வாள்வெட்டுக் குழுக்களுக்காக நீதிமன்றங்களில் சட்டத்தரணிகள் ஆஜராகாது புறக்கணிக்க வேண்டுமென வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா சட்டத்தரணிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஊடகவியலாளர்களுக்கு எதிரான தாக்குதல் சம்பவங்களைக் கண்டித்து நேற்று (30) யாழ்.மத்திய பஸ் நிலையத்தில் இடம்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின் போதே அவர் இவ்வாறு வேண்டுகோள்விடுத்தார்.

அவர் அங்கு உரையாற்றுகையில்,

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைச் சம்பவத்தின் போது, யாழ்.நீதிமன்ற கட்டிடத்தொகுதியின் மீது மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சுத் தாக்குதல் சம்பவத்தின் பின்னர், அந்த குற்றவாளிகளுக்கு சார்பாக நீதிமன்றில் ஆஜராகமாட்டோம் என சட்டத்தரணிகள் முடிவெடுத்திருந்தார்கள். இதுவரையில் ஆஜராகவில்லை என்றும் நினைக்கின்றேன்.

உண்மையாகவே ஊடக சுதந்திரத்திற்கு மதிப்பளிப்பவர்களாயின், இதய சுத்தியுள்ளவர்களாயின், வாள்வெட்டுக் குழுக்களுக்காக நீதிமன்றங்களில் ஆஜராகாது சட்டத்தரணிகள் புறக்கணிக்க வேண்டும். சட்டத்தரணிகள் அனைவரும் வாள்வெட்டுக் குழுக்களின் வழக்குகளில் ஆஜராகமாட்டோம் என தீர்மானித்தால், வாள்வெட்டுக் குழுக்கள் சிறைச்சாலைகளில் இருந்து வெளியே வர முடியாது.

நாங்கள் அரசையும் மற்றவர்களையும் குறை சொல்லுவதை விடுத்து, எங்களை நாங்கள் திருத்திக்கொள்ள வேண்டும். வாள்வெட்டு குழுக்களுக்காக நீதிமன்றங்களில் ஆஜராகுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

வாள்வெட்டுக்குழுக்களின் அடாவடித் தனங்களை நிறுத்துவதற்கு பொலிஸார் துரித கதியில் நடவடிக்கை எடுக்க வேண்டியது பொலிஸாரின் கடமை. ஆனால் பொலிஸார் கடமையிலிருந்து தள்ளியிருக்கின்றார்கள் என்பது பொது மக்களின் குற்றச்சாட்டு.

யாழ்.மாவட்டத்தில் மட்டுமன்றி இலங்கை முழுவதும் இந்த குற்றச்சாட்டு நிலவுகின்றது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

எழுச்சிப் பாடகர் வர்ண ராமேஸ்வரன் அவர்கள் சாவடைந்தார்

நெஞ்சை உருக்கும் மாவீரர் நாள் பாடலான ‘மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி’ ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com