வாள்­வெட்­டுக் கும்­ப­லைச் சேர்ந்த மூவருக்கு 3 வருடங்களும் 5 பேருக்கு ஒரு வருடமும் கடூ­ழி­யச் சிறை

வாள்­வெட்­டுக் கும்­ப­லைச் சேர்ந்த 8 பேரில் மூவ­ருக்கு 3 வரு­டங்­கள் கடூ­ழி­யச் சிறைத் தண்­ட­னை­யும் 5 பேருக்கு ஒரு வருட கடூ­ழி­யச் சிறைத் தண்­ட­னை­யும் விதித்து யாழ்ப்­பா­ணம் நீதி­வான் நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்துள்ளது.

2012ஆம் ஆண்டு யாழ்ப்­பா­ணம், மடத்­த­டி­யில் இடம்­பெற்ற வாள்­ வெட்­டுச் சம்­ப­வத்­தை­ய­டுத்து 8 பேர் பொலி­ஸா­ரால் கைது செய்­யப்­பட்­ட­னர். அந்த கும்­ப­லுக்கு டில்லு என்று பிற்­கா­லத்­தில் பொலி­ஸார் பெய­ரும் வைத்­த­னர். டில்லு உள்­ளிட்ட 8 சந்­தே­க­ந­பர்­கள் மீதான வழக்கு விசா­ர­ணை­கள் யாழ்ப்­பா­ணம் நீதி­வான் மன்­றில் இடம்­ பெற்று வந்தன. அந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை குறித்த வழக்கிற்கு தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதன் போது , வாளால் வெட்டி ஒரு­வ­ருக்கு 8 காயங்­களை ஏற்­ப­டுத்­திய குற்­றத்­துக்கு 3 பேருக்கு 3 ஆண்­டு­கள் கடூ­ழிய சிறைத் தண்­டனையும், அவர்­க­ளுக்கு உடந்­தை­யா­க­வி­ருந்த ஏனைய 5 பேருக்­கும் ஒரு வருட கடூ­ழிய சிறைத் தண்­டனை எனவும் , குற்­ற­வா­ளி­கள் அனை­வ­ரும் பாதிக்­கப்­பட்­ட­வ­ருக்கு தலா 50 ஆயி­ரம் ரூபா இழப்­பீடு வழங்க வேண்­டும்’ எனவும், யாழ்ப்­பா­ணம் நீதி­மன்ற நீதி­வான் சி.சதீஸ்­த­ரன் உத்­த­ர­விட்­டார்.

குறித்த வழக்கில் குற்றவாளிகள் சார்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் முன்னிலையாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com