வார்த்தைகளை விடவேண்டாம் – றிசாட் அட்வைஸ்

மக்கள் பிரதிநிதிகளான நாங்கள் இன்று முரண்படுவோம் நாளை பேசிக்கொள்வோம் ஆனால் மக்களாகிய நீங்கள் ஒரு சாராருக்கு சார்பாக வாத்ததைகளை விட்டு மனஸ்தாபப் படவேண்டாம் என அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் மாட்ட செயலகத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. அங்கு அமைச்சர் றிசாட்ட பதியுதீனுடன் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து முதலமைச்சரும் மாகாண அமைச்சர் அனந்தி சசிதரனும் கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்தனர். இந்நிலையில் அமைச்சர் றிசாட் மாகாணசபை உறுப்பினர் ரவிகரனை அதட்டும் தொனியில் பேசியதாகக் கூறப்படுகிறது. அதன்போது. கூட்டத்தில் இருந்து எழுந்த பொது மக்கள் சிலர் ரவிகரன் மட்டும் பேசவில்லை முல்லைத்தீவு மாவட்ட மக்கள் பேசிக்கொண்டிருக்கின்றார்கள் அதை கவனத்தில் கொள்ளுங்கள் என்றனர். இதன்போதே அமைச்சர் றிசாட் ”மக்கள் பிரதிநிதிகள் இன்று முரண்படுவார்கள் நாளை பேசிக்கொள்ளுவார்கள், மக்கள் அவர்களுக்கு சாதகமாக வாத்ததைகளை விடவேண்டாம் வார்த்தைகளை விட்டு மனஸ்தாப படவேண்டாம் எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com