வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிய பீரிஸ் – தற்கொலை அங்கி தொடர்பில் விசாரணை


அண்மையில் சாவகச்சேரியில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி உட்பட வெடிபொருட்கள்  வெள்ளவத்தைப் பிரதேசத்திற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டிருந்ததாக தெரிவித்திருந்த கருத்துத் தொடர்பில்  குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்குவதற்காக  முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்ஆஜராகியுள்ளார். 

குறித்த சம்பவம் தொடர்பில் அவர் வெளியிட்டிருந்த கருத்துக்கள் தொடர்பிலேயே அவரிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக தெரியவருகிறது.

அண்மையில் யாழ். சாவகச்சேரி, மறவன்புலோ பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து தற்கொலைக்கு பாவிக்கும் ஜக்கெட் மற்றும் 4 கிளைமோர் உட்பட 100 துப்பாக்கி ரவைகள் சாவகச்சேரிப் பொலிஸாரினால் மீட்கப்பட்டன. 

இவ்வாறு மீட்கப்பட்ட வெடி பொருட்கள் வெள்ளவத்தைப் பிரதேசத்திற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டிருந்ததாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com