வானில் இருந்து விழுந்த மர்மப் பொருளால் வேம்படி மாணவிகள் காயம்!

யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் வானில் இருந்து விழுந்த மர்மப் பொருளொன்றினால் படுகாயமடைந்த 18 மாணவிகள் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்றையதினம் (வெள்ளிக்கிழமை) மதியநேர இடைவேளையின்போது மாணவிகள் மைதானத்தில் இருந்த வேளை வானில் இருந்து வீழ்ந்த மஞ்சள் நிறமுடைய திரவத்தினாலேயே மாணவிகள் காயமடைந்துள்ளார்கள்.

குறித்த திரவத்தினால் மாணவிகளின் அவயவங்களில் ஏற்பட்ட எரிகாயங்களினாலேயே அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com