வாக்குறுதி நிறைவேறுமா ! வலிவடக்கு மீள் குடியேறுமா !

12362775_10153708394811327_2564680666630177836_o“நான் இன்று நத்தார் கொண்டாட்டத்திற்காகவே யாழ்ப்பாணம் வந்தேன் ஆனால் அமைச்சர்   விஜயகலா மகேஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோரின் வேண்டுகோளின்பேரில் தெல்லிப்பளை முகாமிலுள்ள மக்களிற்கே தெரியாமல் அவர்களிது குடிசைகளைச் சென்று பார்வையிட்டேன். அவர்களின் குடிசைகளிற்குள் அவர்களின் சமையலறை வரை சென்று என்ன சமைக்கிறார்கள் என பார்த்து அவர்களின் நிலையினைப் பார்வையிட்டு இது விரைவாகத் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனை என புரிந்துகொண்டேன்.

எனினும் கொழும்பிலுள்ள சில தீவிரவாதிகள் நல்லிணக்கம் தொடர்பான செயற்பாடுகளிற்கு முட்டுக்கட்டை இட முயற்சிக்கிறார்கள். நான் புலிகளை மீளுருவாக்கம் செய்ய ஒத்துளைப்பு நல்குவதாக கொழும்பிலுள்ள அறை ஒன்றில் இருந்தவாறு கதைக்கும் சிலர் ஊடகவியலாளர்களை அழைத்து கூட்டம் வைத்து கதைக்கிறார்கள். அவர்களிடம் நான் ஒரு விடையத்தை கூறவிரும்புகின்றேன். நீங்கள் யாழ்ப்பாணம் வந்து இந்த முகாம்களில் உள்ள மக்களைப் பாருங்கள். நீங்கள் வருவதற்காக வாகன ஏற்பாடும் பெற்றோல் செலவையும் நான் பெறுப்பேற்கின்றேன். நீங்கள் கடலடமார்க்கமா வருவதானால் கப்பல் ஒன்றினையும் விமானத்தில் யாழ்ப்பாணம் வருவதானால் விமானம் ஒன்றையும் ஏற்பாடு செய்து தருகின்றேன். யுத்தத்தின்போது இடம்பெயர்ந்து 25 வருடங்களாக முகாம்களில் துன்பப்படும் மக்களின் நிலையினை வந்து பார்வையிடுங்கள்.  இந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பான பிரச்சினையை எதிர்வரும் ஆறுமாத காலப்பகுதிக்குள் முடித்துவைப்பேன்”

CWrhbeoWwAA-gx3இது இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியாக இருக்கின்ற மைத்திரிபால சிறிசேன கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய நத்தார் விழாவில் ஆற்றிய உரை.

25 வருடங்களாக முகாம்களில் வாடும் மக்களைப் பொறுத்தமட்டில் அது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு உரை. உரை நிகழ்த்தப்பட்ட அன்றைதினம் காலையில் அந்த மக்களது முகாங்களிற்குள் அதிரடியாகப் புகுந்த ஜனாதிபதி அவர்களின் சமயலறை வரை சென்று பார்வையிட்டிருந்தார். இலங்கை ஜனாதிபதி ஒருவர் தமிழ் மக்களோடு இவ்வாறாக அளவளாவுவது கூட இதுவே முதல்முறை என புளகாங்கிதப்பட்டவர்களும் உண்டு.

அந்த உரைக்குப்பின் ஜனாதிபதி இரண்டு முன்று தடவைகள் யாழ்ப்பாணம் வந்து போயிருக்கிறார். காங்கேசன்துறை நடேஸ்வரக் கல்லூரி மீளக் கையளிப்பு நிகழ்வைத்தவிர வலிவடக்கு மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் அவர் எந்தவித சமிக்ஞைகளையும் வெளிப்படுத்தவில்லை என்கிற வேதனை வலிவடக்கு மக்களைப் பொறுத்தவரை இருந்துகொண்டுதான் இருக்கிறது. CWrhcOJWsAAleXc

ஜனாதிபதியால் வாக்குவழங்கப்பட்ட ஆறு மாதகால அவகாசம் முடிவுறுவதற்கு இரண்டு தினங்களே எஞ்சியிருக்கும் நிலையில் இன்று (18) ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். இதுவும் ஒரு வராலாற்று முக்கியத்துவம்மிக்க நிகழ்வுதான். இந்திய அரசின் நிதிப் பங்களிப்புடன் சர்வதேச தரமுயர்த்தப்பட்ட துரையப்பா விளையாட்டரங்கின் திறப்புவிழா நிகழ்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. இந்தியப் பிரதமர் ஒருவர் முதல் முறையாக வீடியோ உரையாடல் தொழில்நுட்பம் வாயிலாக யாழ் மக்களிற்கு உரைநிகழ்த்தப்போகின்றார்.

ஆனால் வலி வடக்கு மக்களின் வலிமிகு துயரங்கள் ஆற்றப்படுமா என்பது குறித்து நீண்டதொரு மௌனமே நிலவுகின்றது. இன்றைய யாழ்வருகையின்போது தமது மீள்குடியேற்றம் தொடர்பி் சாதகமானசமிக்ஞை கிடைக்காவிலட்டால் போராட்டங்களைக் கையிலெடுப்பதைத்தவிர வேறு வழி இல்லை என்கிறனர் வலிவடக்கு மக்கள். SAM_0579 copy

வலி.வடக்கின் மீள்குடியேற்றத்தினை 6 மாதங்களுக்குள் பூரணப்படுத்துவேன் என்று ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதியினை நிறைவேற்றாவிட்டால் தொடர் உண்ணாவிரதப் போராட்டங்களை மேற்கொள்ளப்போவதாக   ஆவேசப்பட்டுக்கொண்டனர் அவர்கள்.

வாக்குறுதியின் காலஅவகாசம் 20 ஆம் திகதியுடன் முடிவுறும் நிலையில் தமது உண்ணாவிரதப் போராட்டம் எதிர்வரும் 22 ஆம் திகதி புதன்கிழமை முதல் ஆரம்பிக்கவும் வலி.வடக்கு மக்கள் ஒட்டுமொத்தமான தீர்மானம் ஒன்றினை எடுத்துள்ளனர்.

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இக்கத்தின் யாழ்.மாவட்ட இணைப்பாளர் இன்பம் தலமையில் வலி.வடக்கு மக்களுடைய மீள்குடியேற்றம் தொடர்பில் முகாம் தலைவர்கள், மற்றும் முகாங்களில் உள்ள மக்களுடனான கலந்துரையால் நேற்று யாழ்பாடி விடுதியில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலின் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பிலான ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றும் அங்கு இடம்பெற்றிருந்தது. இச் சந்திப்பில் கலந்து கொண்டவர்களினாலேயே இவ்வுண்ணாவிரதப் போராட்டம் தொடர்பான அறிவிப்பும் விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த வலி.வடக்கு மக்கள்,

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய நத்தார் தின நிகழ்வில் கலந்து கொள்ள வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசே எங்களுடைய முகாமிற்கும் வந்திருந்தார்.

அங்கு வந்த அவர் இன்னும் 6 மாத காலத்திற்குள் உங்களை மீள்குடியேற்றம் செய்வேன் என்று கூறியிருந்தார். அவருடைய அந்த வாக்குறுதியினை வலி.வடக்கு மக்கள் முழுமையாக நம்பியிருந்தார்கள்.12362939_10153708395101327_2700238547699871517_o

இருந்த போதும் இந்த நல்லாட் அரசாங்கம் எங்களை ஏமாற்றிவிட்டது. ஜனாதிபதி வழங்கிய 6 மாத கால அவகாசம் நாளை மறுதினம் 20 ஆம் திகதியுடன் முடிவடைகின்றது. இருப்பினும் எங்களுடைய மீள்குடியேற்றம் தொடர்பான எந்த தகவல்களும் இல்லை.

எங்களை மீள்குடியேற்றுங்கள் என்று கோரி பல பிரச்சினைகள், அச்சுறுத்தல்கள், தடைகளைத் தாண்டியும் எத்தனையோ தொடர்ச்சியான போராட்டங்களை நாங்கள் நடாத்தி வந்திருந்தோம்.
ஆனால் நல்லாட்சியின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குறுதியினை நம்பி எங்களுடைய போராட்டத்தினை கைவிட்டு மீள்குடியேற்றத்தின் கனவுடன் காத்திருந்தோம். இப்போது நாங்கள் நன்றாக ஏமாற்றப்பட்டுவிட்டோம்.

இனியும் எவருடைய கருத்துக்களையும் எங்களால் கேட்டுக் கொண்டு பொறுமையாக இருக்க முடியாது. எங்களுடைய நிலத்திற்குச் செல்ல வேண்டும். இல்லையேன் இங்கேயே உயிரை விட வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டோம் என்கிறனர்.

ஜனாதிபதியின் நத்தார் தின உரை 20.12.2015

மக்களின் மீள்குடியேற்ற பிரச்சினையை ஆறுமாத காலப்பகுதிக்குள் முடித்துவைப்பேன் – யாழில் ஜனாதிபதி மைத்திரி உறுதியளிப்பு

SAM_0622 copy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com