வாக்குறுதிகள் தாராளம தீர்வு பற்றி கதை இல்லை

(31.07.2015) காணாமல் போனவர்கள் யுத்தத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பில் கவனம் செலுத்துவோம்,

உயிரிழந்தவர்களின் குடும்பங்களிற்கு நிதியுதவி வழங்குவோம், இனங்களுக்கு மத்தியிலே ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தி அதனூடாக ஒரு நாட்டை வளப்படுத்துவோம், பலாலி விமான நிலையத்தை நீரமைப்போம், யாழ்ப்பாணத்தில் துறைமுகம் கட்டுவோம், என அடுக்கடுக்காக துர்தல் சலுகை வாக்குறுதிகளை இலவசமாக வழங்கிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் வாயே திறக்காது சென்றமை மக்களிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மக்களைக் கவரும் நோக்கில் தென்னிந்திய சுப்பர் சிங்கர் பாடகர்களின் இசை நிகழ்ச்சியுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் வெள்ளிக்கிழமை (31) நல்லூர் முத்திரைச்சந்தி பகுதியில் நடைபெற்றது, நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இனப்பிரச்சினை தீர்வு தொடர்பிலும் தீர்வு தொடர்பில் தமது தேர்தல் விஞாபனத்தில் உள்ளடங்கிய விடையங்கள் குறித்தும் ஏதும் கருத்து தெரிவித்திராத நிலையில் வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்ப முன்னேற்றம் என வழமையான தேர்தல் சலுகை வாக்குறுதிகளை மட்டும் வழங்கிவிட்டு சென்றிருந்தார்.

குறித்த பிரதேசத்தில் தொடர்ந்து இசைநிகழ்வு இடம் பெறும் என ஏற்பாட்டளர்களால் அறிவிக்கப்பட்டுக்கொண்டிருந்தபோதும் மக்கள் பிரதமரின் உரையினை அடுத்து அரங்கிலிருந்து வெளியேறிச்சென்றமையினைகாண முடிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com