சற்று முன்
Home / செய்திகள் / வாக்குறுதிகளைப் புறந்தள்ளி பட்டதாரிகளை ஏமாற்றும் ரணில் அரசாங்கம்

வாக்குறுதிகளைப் புறந்தள்ளி பட்டதாரிகளை ஏமாற்றும் ரணில் அரசாங்கம்

தொழிலைப் பெற்றுக்கொள்ளும் தமது உரிமையை அரசாங்கம் வழங்க மறுப்பதாக பட்டதாரி மாணவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன் இந்நாட்டின் இளையோருக்கு பெற்றுக் கொடுக்கப்பட்ட முக்கிய வாக்குறுதி – 10 இலட்சம் தொழில் வாய்ப்புக்கள் எனும் வாக்குறுதி என்பதாகும்.

எனினும், 3 வருடங்களின் பின்னர் அந்த இலக்குக்கு அண்மித்துள்ளதைக் கூட காணமுடியா விட்டாலும் கடந்த ஆகஸ்ட் 20ஆம் திகதி அலரிமாளிகையில் 4,053 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டிருந்ததுடன் அது வேலைவாய்ப்பு கொடுத்துவிட்டோம் என்ற மாயையைத் தோற்றுவிக்கும் நோக்கில் வழங்கப்பட்டிருந்தது.

பிரதமர், அமைச்சுப் பொறுப்பை வகிக்கும் பொருளாதார அமைச்சு பகிரங்க பத்திரிகை அறிவித்தல் மூலம் விண்ணப்பம் கோரியிருந்ததுடன், மாவட்ட செயலாளர் காரியாலயம் மற்றும் பிரதேச செயலாளர் காரியாலங்கள் மட்டத்தில் நேர்முக பரீட்சைகளை நடத்தியதன் பின் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரிகள் 4,053 பேருக்கு அன்று நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

இவர்கள் அபிவிருத்தி அதிகாரிகள் பதவிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் 7ஆம் திகதி, தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சின் செயலாளரின் கையொப்பத்தில் அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

3 பரிந்துரைகளுக்கு இணங்க இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளின் தகைமைகளை மீளப் பரீட்சித்து தனக்கு அறிவிக்குமாறு குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது

அதில் இறுதி முடிவாக ஒரு மாதத்திற்கு கூடிய காலம் அரச நிறுவனங்களில் சேவைக்கு இணைத்துக்கொள்ளப்பட்ட புதிய வெளிக்கள பட்டதாரிகளுக்கு இந்நாட்களில் அனுமதிகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக கடிதங்கள் விநியோகிக்கப்படுகின்றன.

இது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சின் செயலாளர் கே.டீ.எஸ். ருவன் சந்திரவிடம் வினவியபோது, குறித்த பதவிகளுக்காக வெளிக்கள பட்டதாரிகள் மட்டும் இணைத்துக்கொள்ளப்படுவது தொடர்பில் அமைச்சு தீர்மானம் எடுத்துள்ளதால், குறித்த நியமனங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com