சற்று முன்
Home / செய்திகள் / வாக்களிப்பு ஆரம்பமானது.

வாக்களிப்பு ஆரம்பமானது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகியுள்ள நிலையில், மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

வாக்காளர்கள் அனைவரும் சரியான ஆவணங்களுடன் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று, உரிய நேரத்தில் தமது வாக்குகளைப் பதிவு செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இம்முறை ஏற்றுக் கொள்ளப்பட்ட 20 அரசியல் கட்சிகள் மற்றும் 15 சுயேட்சைக் குழுக்களும் தேர்தலில் போட்டியிடுகின்றன.

புதிய ஜனநாயக முன்னணி சார்பாக அமைச்சர் சஜித் பிரேமதாசவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் கோட்டாபய ராஜபக்ஷவும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க ஒரு கோடியே 59 இலட்சத்து 92 ஆயிரம் 96 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

அத்துடன், நாடளாவிய ரீதியில் 12 ஆயிரத்து 845 தேர்தல் மத்திய நிலையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.

மேலும் மாலை வாக்களிப்புக்கள் நிறைவடைந்ததும் வாக்கெண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் நடவடிக்கைகளை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்காக 60 ஆயிரத்து 175 பொலிஸார் மற்றும் 8 ஆயிரத்து 80 சிவில் பாதுகாப்பு ஊழியர்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பொலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்களிப்பு நிலையம் ஒன்றில் ஆயுதம் தாங்கிய இரண்டு பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தேவை ஏற்படின் மேலதிக பாதுகாப்பு நடவடிக்கையில் இராணுவத்தினர் பயன்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com