சற்று முன்
Home / தலையங்கம் / வாகீசம் எனும் நாமம் சூடி ஏழாண்டுகள் பயணித்துவிட்டோம்

வாகீசம் எனும் நாமம் சூடி ஏழாண்டுகள் பயணித்துவிட்டோம்

வணக்கம் உறவுகளே !

இன்றைய நாள் ஒன்றில்தான் வாகீசம் இணையம் கிராமிய இணையமாக கோண்டாவில் கிராமத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டது. 2008 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 27 ஆம் திகதி வலைத்தளம் ஒன்றின் ஊடக ஆரம்பமான எமது பயணம் 12.05.2010 அன்று vakeesam.com என  பதிவுசெய்யப்பட்டு ஊரின் பல்வேறு நிகழ்வுகளை தொடர்ச்சியாக பதிவுசெய்துவந்தது. கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் தினசரி செய்தி இணையமாக உங்களோடு உறவாடியது.

கிராமிய இணையமாக வாகீசம் தொடங்கப்பட்டு இன்றுடன் ஏழு  ஆண்டுகள் புர்த்தியாகின்றன. பல நெருக்கடிகளையும் சவால்களையும் தாங்கியவாறு வாகீசம் இணையம் இரண்டு ஆண்டுகளைக் கடந்துள்ளதை எண்ணிப் பார்க்கின்றோம்.
செய்தி இணையமாக நாங்கள் உங்கள் முன் இரண்டு வருடங்களே கடந்த சிறியவர்களே. கடந்த காலங்களில் நிலவிய இறுக்கமான அரசியல் சூழல்கள் ஊடகங்கள் மீதான கட்டுப்பாடுகள் என்பவற்றை எல்லாம் தாங்கியவாறு அரசியல் மற்றும் பொருளாதார பின்புலங்களற்று ஒரு இணையத்தை நகர்த்திச்செல்வதென்பது இயலாத காரியம் ஆனபோதும் மூத்தவர்களோடு பின்னின்று அவர்களின் வழிகாட்டல்களோடு எமது பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கின்றோம். 
இதுவரையான எமது பயணத்தில் செய்திகளை முந்திக்கொண்டு தருவதில் நாங்கள் முதன்மையானவர்களாக இருப்பதில்லை என்ற வாசகர்களின் குற்றச்சாட்டுகள் ஏற்புடையவே. எனினும் செய்திகளை நிதானமாக வழங்கியிருக்கிறோம் என்ற வாகசர்களின் கருத்துக்களையும் மாலையாய் சூடிக்கொண்டு தொடர்ந்து பயணிப்போம்.

அவ்வகையில் எமக்கு வழிகாட்டிகளாய் இருக்கும் மூத்த ஊடகவியலாளர்கள், படைப்பிலக்கியகார்கள், மற்றும் எம்மோடு பணியெய்தும் ஊடக நண்பர்கள், வாசகர்கள் விளம்பரதாரகள் அனைவருக்கும் இத்தருணத்தில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
வாகீசம் உங்களுக்காய் தொடர்ந்தும் பயணிக்கும் என்ற உறுதியுடன்.

நன்றி

வாகீசம் இணையக்குடும்பம்.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கிராமிய இணையமாய் வாகீசம் எனும் நாமம் சூடி இன்று எட்டு ஆண்டுகள் பயணித்துவிட்டோம்

வணக்கம் உறவுகளே ! இன்றைய நாள் ஒன்றில்தான் வாகீசம் இணையம் கிராமிய இணையமாக http://vakeesam.blogspot.com/,  https://vakeesam.wordpress.com/கோண்டாவில் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com