வாகீசம் உதவி ஆசிரியர் மீது தாக்குதல் முயற்சி – சுன்னாகம் பொலிசாரிற்கு எதிராக சுன்னாகம் பொலிஸ் நிலைத்தில் முறைப்பாடு

87135-police-02உடுவில் மகளிர் கல்லூரிப் பிரதேசத்தில் செய்தி சேகரிப்புப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வாகீசம் இணைய உதவி ஆசிரியரை அச்சுறுத்தியமை மற்றும் அவரை தள்ளிவிட்டு தாக்க முனைந்தமை புகைப்படக்கருவிகளை தட்டிவிட்டமை போன்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் சுன்னாகம் பொலிசாருக்கு எதிராக சுன்னாக பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 87135-police-13

உடுவில் மகளீர் கல்லூரியில் அதிபர் மாற்றத்திற்கு எதிராக கடந்த 3ம் திகதி தொடக்கம் போராட்டம் முன்னெடுக்கபட்டு வருகின்றது. இந்நிலையில் இன்றைய தினம் பாடசாலை மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைக்காக மீள அராம்பமானது.

அதன் போது பாடசாலைக்கு வருகை தந்த மாணவிகளை பாடசாலை மண்டபத்திற்கு அழைத்து புதிய அதிபரின் தலைமையில் , அவருக்கு ஆதரவான ஆசிரியர்கள் கலந்துரையாடல்களை நடாத்தி இருந்தனர்.87135-police-04

அதில் இருந்து சில மாணவிகள் வெளியேறி தமது பெற்றோருடன் வீடு செல்ல முற்பட்டனர். அதனை அங்கு கடமையில் இருந்த சுன்னாக பொலிசார் தடுத்து நிறுத்தினர்.

பொலிசார் தடுத்து நிறுத்திய போதும் பெற்றோர் தமது பிள்ளைகளை அழைத்து சென்றனர். அதனை அடுத்து மாணவிகளை சுன்னாக பொலிசார் துரத்தி துரத்தி வீடியோ எடுத்திருந்தார்.87135-police-05

பொலிசார் வீடியோ எடுப்பதனை , மாணவிகளின் பெற்றோர் தடுக்க தடுக்க பொலிசார் வீடியோ எடுத்தனர். இவ்வாறு பொலிசார் பெற்றோர் தடுக்க தடுக்க மாணவிகளை வீடியோ எடுப்பதனை அங்கிருந்த ஊடகவியலாளர்கள் வீடியோ எடுத்தனர்.

அதனை அடுத்து போலீசாரை வீடியோ எடுத்த வாகீசம் இணைய உதவி ஆசிரியர் மற்றும் யாழ். தினக்குரல்  ஊடகவியலாளரை பொலிசார் தள்ளி விட்டதுடன் , புகைப்பட கருவியை தட்டி விட்டதோடு , உங்களை கைது செய்வேன் எனவும் அச்சுறுத்தியிருந்தனர்.87135-police-11

இது தொடர்பில் சுன்னாக பொலிஸ் நிலையத்தில் இரு ஊடகவியலாளர்களும் முறைப்பாடு பதிவு செய்தனர். அதில் தமது ஊடகபணிக்கு இடையூறு விளைவித்தமை , மிரட்டியமை தொடர்பில் குறிப்பிட்டு இருந்தனர்.

இதேவேளை வீதியால் பயணித்துக்கொண்டிருந்த பொதுமக்களையும் பொலிசார் அவர்களின் முகங்களிற்கு நேராக கமராவை பிடித்து அவர்களை அச்சுறுத்தும்வகையில் வீடியோ எடுத்தபோது பொதுமக்கள் சிலர் பொலிசாருடன் முரண்பட்டுச் சென்றமையும் குறிப்பிடத்தக்கது.

87135-police-03

87135-police-08 87135-police-10
87135-police-01 87135-police-12 87135-police-10 87135-police-09 87135-police-06 87135-police-03

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com