வாகன சாரதிகள் அவதானம்…

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக தொடர்சியாக மழை பெய்கின்றது. கடந்த நான்கு நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வந்திருந்தாலும் 19.05.2016 அன்றும் 20.05.2016 அன்றும் இடைக்கிடையே மழை பெய்து வருவதை காண முடிகின்றது.

நுவரெலியா மாவட்டத்தில் இவ்வாறான நிலை காணப்படுகின்றது. அதிகாலை வேளையில் பனிமூட்டம் அதிகமாக காணப்படுவதோடு காலநிலை சீர்கேடாக காணப்படுகின்றது.

அட்டனிலிருந்து நுவரெலியா செல்லும் பிரதான வீதியில் பனிமூட்டம் அதிகமாக காணப்படுவதோடு நுவரெலியா நகரம் பனிமூட்டம் படர்ந்த பகுதியாகவே அதிகாலையில் காட்சியளிக்கின்றது.

அத்தோடு காற்றும் வீசப்படுகின்றது. சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளமையும் சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.

பனி மூட்டம் அதிகமாக காணப்படுவதனால் வாகன சாரதிகள் பல சிரமங்களை எதிர்நோக்குவதோடு அவ்வப்போது சாரதிகளுக்கு அறிவுறுத்தல்களையும் போக்குவரத்து பொலிஸார் வழங்கி வருகின்றனர்.

மேலும் மலையக பகுதிகளில் உள்ள பிரதான வீதிகளில் ஆங்காங்கே தாழ்யிறக்கம் காணப்படுவதனால் அப்பகுதியில் பாரிய வெடிப்புகள் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக நானுஓயா நகரத்திலிருந்து நுவரெலியா செல்லும் பாதையில் பங்களாஅத்த மார்க்கத்தில் பாரிய வெடிப்பு பாதையில் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் வீதி அதிகார சபையின“ ஊடாக பாதுகாப்பு சமிஞைகள் போடப்பட்டுள்ளது. இதேவேளை நுவரெலியா கிரகரி வாவிக்கு அண்மித்த பகுதியில் பதுளை செல்லும் பிரதான வீதியில் சிறியளவிலான குழி ஒன்று காணப்படுவதனால் வாகன சாரதிகளை அவதானமாக செல்லுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.IMG_4682 IMG_4691 IMG_4705 IMG_4710

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com