வாகன சாரதிகளுக்கு அவசர செய்தி – தண்டம் அதிகரிப்பு !!

வாகன சாரதிகள் இழைக்கும் தவறுகளுக்காக குறைந்த பட்சம் 25,000 ரூபா வரையான அபராதத்தை விதிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

அதனடிப்படையில்
• அங்கீகரிக்கப்பட்ட போக்குவரத்து அனுமதிப்பத்திரங்கள் இன்றி வாகனம் செலுத்துதல்.
• போக்குவரத்து அனுமதிப்பத்திரம் அற்ற சாரதி ஒருவரை சேவைக்கு அமர்த்துதல்.
• மதுபானம் அல்லது போதைப்பொருள் பாவித்ததன் பின்னர் வாகனம் செலுத்துதல்.
• புகையிரத வீதியினுள் முறையற்ற விதத்தில் மோட்டார் வண்டிகளை செலுத்துதல்.
• அங்கீகரிக்கப்பட்ட காப்புறுதி இன்றி வாகனம் செலுத்துதல்
ஆகிய குற்றங்களுக்கு 25 ஆயிரைம் ரூபா தண்டப்பணமாக அறவிடப்படவுள்ளது.

• அதிக வேகத்தில் வாகனம் செலுத்துதல்.
– குறிக்கப்பட்ட வேகத்தை விட 20% வரையான அதிக வேகத்தில் வாகனம் செலுத்துபவர்களுக்கு 3,000 ரூபாவும்,
– குறிக்கப்பட்ட வேகத்தை விட 20%க்கும் அதிகமான மற்றும் 30% குறைவான வேகத்தில் வாகனம் செலுத்துபவர்களுக்கு 5,000 ரூபாவும்,
– குறிக்கப்பட்ட வேகத்தை விட 30%க்கும் அதிகமான மற்றும் 50% குறைவான வேகத்தில் வாகனம் செலுத்துபவர்களுக்கு 10,000 ரூபாவும்,
– குறிக்கப்பட்ட வேகத்தை விட 50%க்கும் அதிக வேகத்தில் வாகனம் செலுத்துபவர்களுக்கு 10,000 ரூபாவும்,
எனும் அடிப்படையில் உரிய இடத்தில் தண்டப்பணம் அறவிடப்படவுள்ளது.

இதேவேளை
• இடது பக்கத்தால் முன்னோக்கி செல்லுதலுக்கு 2000 ரூபா
• பிறிதொரு நபரை நோக்கி கவனயீனமாக அல்லது எவ்வித காரணமுமின்றி வாகனம் செலுத்துதலுக்கு 10,000 ரூபா
• பாதுகாப்பற்ற முறையில் அல்லது விபத்தொன்றை ஏற்படுத்தும் வகையில் மோட்டார் வாகனங்களை செலுத்துதலுக்கு 10,000 ரூபா
• குறித்த வயதுக்கு குறைந்த வயது பொருந்திய ஒருவரினால் வாகனம் செலுத்துதல்க குற்றத்துக்காக தற்போது காணப்படுகின்ற குறைந்த பட்ச தண்டப்பணத்தினை 5,000 ரூபாவிலிருந்து 30,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
• மோட்டார் வாகன சட்டத்தில் குறிப்பிடப்படாத குற்றங்களுக்காக அறவிடப்படுகின்ற தண்டப்பணம் 2,500 ரூபா
 கையடக்கத் தொலைப்பேசியினை பயன்படுத்திக் கொண்டு வாகனங்களை செலுத்துவது தொடர்பில் 2,000 ரூபாவும் அறவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com