வஸீம் தாஜுதீன் படு­கொலை தொலை­பேசி இலக்­கங்­கள் கண்டுபிடிப்பு!

பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படு­கொலை விவ­கா­ரத்தில் சந்­தே­கத்­துக்கு இட­மான பல தொலை­பேசி இலக்­கங்­களை கண்­டு­பி­டித்­துள்­ள­தாக குற்றப் புல­னாய்வுப் பிரிவு நேற்று கொழும்பு மேல­திக நீதிவான் ஜெயராம் டொஸ்­கிக்கு அறி­வித்­தது.

வஸீம் தாஜுதீன் படு­கொலை விவ­காரம் தொடர்­பி­லான வழக்கு நேற்று விசா­ர­ணைக்கு வந்த போதே விசேட மேல­திக அறிக்கை ஊடாக இதனை குற்றப் புல­னாய்வுப் பிரிவு நீதி­மன்­றுக்கு அறி­வித்­தது.

அதன்­படி கண்­டு­பி­டிக்­கப்பட்­டுள்ள சந்­தே­கத்­துக்கு இட­மான தொலை­பேசி இலக்­கங்­க­ளுக்கு உரிய நபர்­களின் அடை­யாளம் மற்றும் நட­வ­டிக்­கை­களை  உறுதி செய்­து­கொள்­வ­தற்­கா­க நிறு­வ­னங்கள் பல­வற்றில் இருந்து தக­வல்­களைப் பெற்று விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­தா­கவும் குற்றப் புல­னாய்வுப் பிரிவு மேல­திக நீதிவான் ஜெய ராம் டொஸ்­கிக்கு அறி­வித்­தது.

அதன்­படி வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள சந்­தே­கத்­துக்கு இட­மான தொலை­பேசி இலக்­கங்­க­ளுக்கு உரிய சந்­தே­கத்­துக்கு இட­மான நபர்­களின் அடை­யாளம் மற்றும் நட­வ­டிக்­கை­களை உறுதி செய்ய குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­களம், ஆட்­ப­திவு திணைக்­களம் மற்றும் தேர்­தல்கள் ஆணைக்குழு மற்றும் மோட்டார் வாகன பதிவுத் திணைக்­களம் ஆகி­ய­வற்­றி­லி­ருந்து தக­வல்­களைப் பெற்று விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்பட்­டுள்­ள­தா­கவும் குற்றப் புல­னாய்வுப் பிரிவு நீதி­மன்­றுக்கு அறி­வித்­தது.

இத­னி­டையே நேற்று வழக்கு விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்ட போது, சந்­தேக நப­ராக பெய­ரி­டப்பட்­டுள்ள முன் னாள் கொழும்பு சட்ட வைத்­திய அதி­காரி ஆனந்த சம­ர­சே­கர மன்றில் ஆஜ­ரா­காத நிலையில், அவ­ருக்கு பிடி­யாணை பிறப்­பிக்க பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் டிலான் ரத்­நா­யக்­க­வினால் மன்றில் கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டது. எனினும் அவர் சுக­யீனம் கார­ண­மாக சிகிச்சை பெறு­வ­தா­கவும், விசேட வழக்­காக இந்த வழக்கு பார்க்­கப்­ப­டு­வதால் வைத்­தி­யர்கள் மருத்­துவ சான்­றிதழ் அளிக்க முன்­வ­ர­வில்லை எனவும் ஆனந்த சம­ர­சே­க­ரவின் சட்­டத்­த­ரணி ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி சவேந்ர பெர்னாண்டோ இதன்­போது நீதி­வா­னிடம் தெரி­வித்தார்.

இந் நிலையில் நேற்று பிடி­யாணை பிறப்­பிக்­காத நீதிவான் அடுத்த தவ­ணையில் ஆனந்த சம­ர­சே­கர மன்றில் கண்­டிப்­பாக ஆஜ­ராக வேண்டும் எனவும் நேற்று மன்றில் ஆஜ­ரா­காத­தற்­கான கார­ணத்தை அவர் மருத்­துவ அறிக்கை ஊடாக மன்­றுக்கு தெளி­வு­ப­டுத்த வேண்டும் எனவும் உத்­தரவிட்டார்.

இத­னை­விட நேற்று குற்றப் புல­னாய் வுப் பிரிவு விசேட கடிதம் ஊடாக,  இவ்­வ­ழக்கின் தடயப் பொரு­ளாக உள்ள வஸீம் தாஜு­தீனின் கைய­டக்கத் தொலை­பே­சியை விசா­ர­ணை­களை முன்­னெ­டுப்­ப­தற்­காக நீதிமன்றிடம் கோரியது. புலனாய்வுப் பிரிவின் கோரிக்கைக்கு அமைவாக நீதிமன்றின் கட்டுப்பாட்டில் இருந்த அந்த கையடக்கத் தொலைபேசியானது விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் கையளிக்கப்பட்ட நிலையில் வழக்கானது எதிர்வரும் 30 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com